இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ???
அரசியல் சாக்கடையில் எவையெல்லாம் விழுமோ அவை நாசமாகிப்போகும் என்பது பச்சக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இப்பெல்லாம் நம்ம தாய்மார் சின்ன பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவது எம் பி மாமா வரார்னுதான். அண்மையில் இலங்கை கிரிக்கட் விழுந்ததும் இது போல ஒரு அசிங்கமான சாக்கடையில்தான். இலங்கை கிரிக்கட்டில் அது இன்னும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அர்ஜூன ரனதுங்க இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இலங்கை ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்கள் இலங்கை கிரிக்கட்டில் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. இது சாதகமா பாதகமா என்பது ஒரு பக்கமிருக்க இதன் பாதிப்பு இலங்கையின் கிரிக்கட்டை சீரழித்துவிடும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
ஜனாதிபதி இந்த நியமனத்தை வாரி வழங்கக் காரணம் அரச கட்சியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் நோக்கம் ஒன்று தான். ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெறுவது வழக்கம். இதனால் ரணதுங்கவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு நல்ல பதவிகளை வழங்கியது. ஏற்கனவே இந்த இலங்கை அரசாங்கத்தை பலரும் சகோதரர்களின் கம்பனி என்று நக்கலடிப்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இதே பணியை இலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவாராக நியமிக்கப்பட்ட முன்னாள் அணித்தலைவர் ரணதுங்க பின்பற்ற தொடங்கிவிட்டார். முதல் நடவடிக்கையாக தன்னுடைய சகோதரரை இலங்கை அணியின் முகாமையாளராக நியமித்தார். அடுத்த அடி ஜசிசி தடை செய்த ஜ பி எல் அமைப்பில் விளையாடும் தனது நெருங்கிய உறவினரான அதபத்து உள்ளிட்ட சில வீரர்களுக்கு தேசிய மட்டத்திலான போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கினார். இன்னுமொரு அடி வெகுவிரைவில் விழப்போகிறது. இலங்கை கிரிக்கட்டில் நீண்டகாலம் சிரேஷ;ட அதிகரியாக கடைமையாற்றி வரும் முன்னாள் வீரர் ஒருவருக்கு கர்த்திருக்கிறது(நடக்கத்தானே போகுது நடந்த பிறகு உங்களுக்கு புரியும்). இன்னுமொரு விடயத்தை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும்
விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் கிரிக்கட் தலைவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு பூகம்பமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எது எவ்வாறாக இருப்பினும் 'தாருன்யட ஹெடக்' என்ற அமைப்பின் தலைவர், ஜனாதிபதியின் மகன் தலைமையில் ஹம்பாந்தொட்டையில் கட்டப்படும் சர்வதேச தரத்திலான மைதானத்தின் பணிகள் மும்முரமாக நடக்குதாம்.
(புதிய சர்வதேச தரத்திலான மைதானத்திற்கு ரணதுங்கவின் பெயரை வைத்து இலங்கை அணியை அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொண்ட அணியாக உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)
0 COMMENTS:
கருத்துரையிடுக