85 வயது ஓய்வூதியக்காரர் கடவுளின் அழைப்பிற்காக வீதி ஓரத்தில் சந்தோசமாக........
ஹங்கேரியாவைச் சேர்ந்த 85 வயது நிரம்பிய சர்மாஸ் தன்னுடைய வாழ் நாளில் தான் சேமித்த பணம், சொத்து மற்றும் வீடு வாசல் அனைத்தையும் சிறுவர்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு வீதியில் வசிக்கிறார்.
கார்ட் போர்ட் பெட்டியில் கட்டி அதில் வசிக்கும் இவர் தானமாக கொடுத்த பணத்தில் சிறுவர் இல்லத்தில் x-tray கருவியும் இதய scanning கருவியும் வாங்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் கடமை புரிந்த இடத்தில் 100000 ஸ்ரேலிங் பவுணை சிறுவர் நிதியத்திற்கு சேகரித்துக்கொடுத்திருக்கிறார்.
சர்மாஸ் : "அந்த சிறுவர்கள் முழழுமையாக தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பதை நினைத்து கவலைப்படுகிறேன். நான் 85 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன் இது அவர்களுடைய சந்தர்ப்பம். இதனால் நான் கஷடப்படுவதை நினைத்து வருந்தவில்லை என் ஒருவனின் கஷ;டத்தில் ஆயிரம் சிறுவர்கள் சிரிக்கிறார்கள்". என்கிறார் அந்த நல்ல மனசுக்காரர்.
இப்படியும் நல்லவங்க இருக்கிறதாலதான் கொஞசம் மழை பெய்யுது.
2 COMMENTS:
சர்மாஸ் உங்களுக்கு சொர்கத்தில் நிச்சயம் ஒரு இடம் உண்டு .
ரேகா ராகவன்
சர்மாஸ் உங்களுக்கு சொர்கத்தில் நிச்சயம் ஒரு இடம் உண்டு .
ரேகா ராகவன்
கருத்துரையிடுக