நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

PM 3:53 Hisham 0 Comments

அன்பான நண்பர்களே, 

நமது வாழ்க்கையில் எல்லாமே ஒரு காரணத்தோடுதான் நடக்கிறது. இந்த ரகசியத்தை புரிந்துகொள்கிறவர்கள் சிகரம் தொடுகிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் நமக்கு நடக்கக் கூடிய சில விஷயங்கள் பெரிய வருத்தத்தையும் கவலையையும் அந்த தருணத்தில் தரும் ஆனால் கொஞ்ச காலம் கழித்து அன்று இப்படி நடந்ததால்தான்  இன்னைக்கு வாழ்க்கையில் என்னால் இவ்வளவு உயர முடிந்தது என்று நாம் அந்த சம்பவத்தை நினைத்து பெருமை கொள்வோம்.

டானி ரோபின்ஸ் அவருடைய அன்லிமிட்டட் பவர் என்கிற புத்தகத்தில் சொல்கிறார் "Everything happens for a reason" எல்லாமே ஒரு காரணத்தோடுதான் நடக்கிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முறை ஸ்டீவ் ஜாப்ஸ் உரை நிகழ்த்தும் போதும் அவருடைய உரையில் Connecting the dots என்று சொல்லி ஒரு தியரியை மாணவர்களுக்கான உரையில் சொன்னார், அவருடைய வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன விஷயங்களில் இருந்து பல்வேறுபட்ட சவாலான  தருணங்கள் கூட பிந்நாட்களில் அவர் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களை தொடுவதற்கும் எவ்வளவு துணையாக அமைந்தது என்பதை விளக்கினார். 

அன்லிமிட்டட் பவர் என்கிற புத்தகத்தில் இருந்து வெற்றியை வேகப்படுத்தும் இன்னும் சில நுட்பங்களை என்னுடைய யூடியூப் சனலில் தந்திருக்கிறேன் பாருங்கள் தொடுப்பு கீழே கிடைக்கும்.