என் நண்பன்!

00:59 Hisham. M 7 Comments

ஏதோ ஒரு தெரியாத தொலைபேசி இலக்கத்துல இருந்து ரெண்டு மிஸ் கோல். ஒரு சில மணித்தியாலத்திற்கு பிறகு மீண்டும் அழைப்பெடுத்து பார்த்தேன். மறுமுனையில் 'அறிவிப்பாளர் எப்படி இருக்கீங்கன்னு' ஒரு குரல். உடனடியா மதிக்க முடியல. 'சவுத் ஆப்ரிக்கால இருந்து தீலீப் பேசுறேன்டா..' திலிப் என் பள்ளிக்காலத்து நல்ல நண்பன்.பல வருடங்களுக்கு பிறகு அவனோட குரல கேட்குறேன். கொஞ்ச நேரம் என்னையே மறந்து பேசிட்டிருந்தேன். ஒரு சில நிம
ிடம் வசந்த காலத்தின் வாசல் திறந்தேன். கடைசியா 'இங்க வந்து ஆறு வருசமாச்சு இப்போதான் இந்த தூரமும் தனிமையும் எவ்வளவு தூரம் அன்பை தேட வைக்குதுன்னு புரியுது.. டேய் வேலை இருக்கு வரும் போது கட்டாயம் சந்திக்கனும்னு' சொல்லிட்டு போன கட் பண்ணி ரொம்ப நேரமாகியும் ஒன்னு ரெண்டு ஞாபகங்கள் இன்னும் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கு..

அவனோட ஒரு சில நிமிட உரையாடல் நண்பர்களோடு இருந்த நல்ல பொழுதுகளின் நம்பிக்கையை உணர்த்தியது. திரும்பும் இடமெல்லாம் நண்பர்கள்னு ராஜா போல ஒரு வாழ்க்கை என் இலட்சியத்துக்காக அத்தனையும் துறந்து பட்டணம் வந்தேன். பறந்தோடிய நாட்களின் முடிவில் நண்பர்கள் பல திசைகளில் நாடு கடந்து வாழ்கிறார்கள். காலம் தலைநகரின் வாழ்க்கை வட்டத்தில் இப்படியும் நண்பர்கள்னு இரண்டு விதமாகவும் காட்டியது. இப்போது சறுக்கல்களிலும் சந்தோசங்களிலும் கூட இருக்கும் நண்பர்கள் என் வெற்றியின் ரகசியம்.

நமக்குள் இருக்கும் 'நான்' யாருன்னு தேடனும். முகவரிய தொலைச்சிட்டு மிமிக்ரி பண்றதுல லாபமில்ல. 
 


என்னோட நண்பர்கள நினைக்கும்போது பெருமையா இருக்கு அவங்ககிட்ட இருந்து நான் இன்னும் படிக்க வேண்டி இருக்கு. சுயநலமில்லாத அவங்களோட அன்பு இந்த உலகத்துல எதுவுமே விலை மதிப்பில்லன்னு சொல்லும். அத்தனையும் செஞ்சிட்டு மேடையேறி நான் கை தட்டு வாங்கும் போது பின் வரிசையில நின்னு இதயத்தால சிரிக்கிற நீதான் என் நண்பன். வெட்கப்பட்றேன் சில நேரம் மனிதர்கள் போல சுயநலமா இருந்ததுக்கு. எதிர்பார்ப்பில்லாத அன்பு வாழ்க்கையை உணர்த்தும்னு சொல்லுவாங்க. நாம எப்பவும் உண்மையா வாழ நல்ல நண்பர்கள் இருக்கனும். அவங்கதான் எப்பவும் நமக்கு நல்ல கண்ணாடி.

ஒரு குழந்தையின் சிரிப்பு நம் மனதுக்கு அவ்வளவு ஆனந்தத்தை தருகிறதே ஏன்னு யோசிச்சு பாத்திருக்கோமா? அதில் வஞ்சம் இல்லை. ஆனால் நாம இப்ப யாரயாவது பாத்து சிரிக்கக் கூட பல தடவை யோசிக்கிறோம். நான் எதுக்கு சிரிக்கனும்னு ஒரு இருமாப்பு. நம்மை சுத்தி ஒரு இரும்புக்கதவு போட்டு பூட்டி வைச்சிருக்கோம். எதுக்காக? சமூகம், அந்தஸ்து, பணம் இன்னும் என்னென்னவோ. இதனாலதான் மனுசன் குழந்தையாவே இருக்கிறதில்ல. கடவுள் ஒன்னும் நமக்கு முதுமைய தாரதில்ல நாம்தான் தேடிப்பெற்றுக்கொள்றோம். இனியாவது என்னோட குழந்தைதனத்தை நான் தேடக் கூடாதா. ஒரு அழகான பட்டாம் பூச்சியை எவ்வளவு கொடூரமா கொலை பண்ணியிருக்கோம் நம்ம சுயநலத்துக்காக.

என் துயர் நெடுகிலும் என்னோடு துணையிருந்து. ஏறும்போதெல்லாம் ஏணியாய் தோள்கள் தந்த என் நண்பர்களுக்கு இந்த பதிவு.

பெயர் குறிப்பிட்டால் குற்றமாகிவிடும். இப்போது இந்த நிமிஷம் உன் உள் மனது ஒரு உண்மை சொல்லும் நீதான் என் நண்பன் என்று பூட்டு போட்டு மறைத்து விடாதே நீ மனிதனாகி விடுவாய்.

நடு சாமத்திலும் உன் கதவு தட்டுவேன் உரிமையோடு என் பதிவை வாசிச்சு பாருன்னு யேன்னா நான் உன் நண்பன்.

7 COMMENTS:

பல காரணங்களுக்காக வெளிநாடுகளில் நட்பைத்தொலைத்துவிட்டு நட்புக்காக ஏங்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்...

அழகான எண்ணப்பகிர்வு...

நடுசாமத்திலும் கதவு தட்டினால்...மச்சி ஏதாவது பிரச்சனையா ஹெல்ப் வேணுமாடா என்று கேட்பது நண்பன் மட்டும் தான்

Bavaneedha said...

நல்ல நண்பர்கள் அமைறது வரம்...
நம்ம மனச சரியா புரிஞ்சிக்கிற நண்பர்கள் எத்தனை பேர்
இல்ல நாம தான் அப்படி இருக்கோமா ?
கஷ்டத்துல தோள் கொடுக்கும் நட்பு எல்லாருக்கும் அமையாது அண்ணா
நட்பு விஷயத்துல நீங்க ரொம்ப கொடுத்து வச்சவர்
இந்த விஷயத்துல உங்கள பார்த்து நான் பொறாமைப்படுறேன்:)

Bavaneedha said...

நல்ல நண்பர்கள் அமைறது வரம்...
நம்ம மனச சரியா புரிஞ்சிக்கிற நண்பர்கள் எத்தனை பேர்
இல்ல நாம தான் அப்படி இருக்கோமா ?
கஷ்டத்துல தோள் கொடுக்கும் நட்பு எல்லாருக்கும் அமையாது அண்ணா
நட்பு விஷயத்துல நீங்க ரொம்ப கொடுத்து வச்சவர்
இந்த விஷயத்துல உங்கள பார்த்து நான் பொறாமைப்படுறேன்:)

Bavaneedha said...

நல்ல நண்பர்கள் அமைறது வரம்...
நம்ம மனச சரியா புரிஞ்சிக்கிற நண்பர்கள் எத்தனை பேர்
இல்ல நாம தான் அப்படி இருக்கோமா ?
கஷ்டத்துல தோள் கொடுக்கும் நட்பு எல்லாருக்கும் அமையாது அண்ணா
நட்பு விஷயத்துல நீங்க ரொம்ப கொடுத்து வச்சவர்
இந்த விஷயத்துல உங்கள பார்த்து நான் பொறாமைப்படுறேன்:)

Bavaneedha said...

மனதை நெகிழ வைத்த ஒரு அருமையான அனுபவ பகிர்வு /பதிவு ....
படித்து முடித்ததும் என்னுள்ளே தொலைந்து போன பட்டாம் பூச்சிகள்
மெல்ல எட்டிப்பார்கின்றன...
அதன் சிறகடிப்புகள் என்னை மீண்டும் மீட்டுவிட்டன...

பதிவு அருமை..

anniedesilva said...

அன்பர்களே!

இலங்கை எழுத்தாளர்கள் தமது திறமைகளை வெளிகாட்டும் வாய்ப்பு மிகவும் அரிது என்பதை, இணையதளம் மூலம் ஆய்வு செய்பவர் என்ற வகையிலும், ஆர்வமுள்ள வலைபதிவாளர் என்ற வகையிலும் நன்கு உணர்ந்துள்ளேன். திறமைமிக்க வலைபதிவுக்கான சூழல் உள்ளபோதும், இலங்கை எழுத்தாக்கம் தொடர்பாக யாரேனும் தேடல் செய்ய விரும்பின், மிக அரிதாகவே ஏதேனும் தகவலை பெறமுடிவதுடன், பல சிறந்த எழுதாகங்கள் தவரவிடபடுகின்றன.

இலங்கை எழுத்தாளர்கள் தமது திறமைகளை வெளிக்காட்ட கூடிய இலத்திரனியல் தளம் ஒன்றை உருவாக்குவதே எனது விருப்பம். இவ் இலத்திரனியல் தளத்தினை இலவசமாக பயன்படுத்த முடிவதுடன், அனுபவம் மிக்க மற்றும் இளம்எழுத்தாளர்களும் தமது ஆக்கங்களை பிரசுரிக்கமுடியும்.

இந்த தளத்தினூடாக கருத்துக்களை பகிருதல், வலைபதிவாளர்களை பின்தொடர்தல், இலத்திரனியல் விளையாடுகள் மற்றும் போட்டிகள் நடாத்துதல் மட்டுமன்றி தமது ஆக்கங்களை விற்பதற்கான வாய்ப்புக்களையும் வழங்கி, இலங்கையின் எழுத்து திறமையினை மேம்படுத்துவதே நோக்கமாகும்.

தயவுசெய்து உங்கள் பெறுமதிமிக்க 5 நிமிட நேரத்தை செலவுசெய்து, இங்கே தரப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதின் மூலம் இந்நோக்கத்தை செயற்படுத்த உதவவும்.

Sri Lanka writers survey OR -> http://goo.gl/forms/tVljipzaAF

நன்றி!