யேசு நாதர் கிருஷ்ணபரமாத்மா புத்தர் நபிகள் நாயகம் இவர்கள் நேசித்த ஒன்று............
கிறிஸ்மஸ் தினத்தில் என்னுடைய நாள் காலைப்பொழுது நேத்ரா TV இல் காலை விடிவெள்ளி சிறப்பு நிகழ்ச்சியோடு ஆரம்பமானதில் கோடி சந்தோசம். கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லவில்லையென்று எந்தவொரு நண்பரும் என்னை கோபிக்க முடியாது எல்லாருக்கும் டிவியில் வாழ்த்து சொல்லிட்டோம்ல. கிறிஸ்மஸ் காலை சிறப்பு நிகழ்ச்சியில் மன்னிப்பு என்ற தலைப்பை வழங்கியிருந்தோம். ஏராளமான நண்பர்கள் தொகுப்பாளர்களை கதைக்க விடாமல் கருத்து சொன்னதால டயட் இல்லாம நிகழ்ச்சி செய்த திருப்தி.
யேசு நாதரிடம் இருந்த உயிரிய பண்புகளில் ஒன்று.....
கிருஷ்ணபரமாத்மா வலியுறித்திய பண்புகளில் ஒன்று.....
நபிகள் நாயகம் போற்றிய பண்புகளில் ஒன்று....
புத்தர் போதித்த பண்புகளில் ஒன்று....
மன்னிப்பு.
இது கடவுளின் பண்பு. இதனாலதான மன்னிக்கிறவன கடவுள்னு சொல்றாங்களோ. இந்த உயரிய பண்பு எல்லா புத்திஜீவிகளுக்கும் வராது. எத்தனை புதுவருடங்கள் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் எங்கள மாத்த முடியாது. நாங்க எதுக்கு அவன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் இப்படி சொல்கிறவர்கள் எதை சாதிச்சதா நினைச்சு பெருமை பட்டுக்கொள்றாங்களோ தெரியல.மன்னிக்கிறதால என்ன குறைஞ்சு போயிடும்னு பயப்பட்றிங்க. உங்க எதிரிகளுக்கு உங்களால கொடுக்கக்கூடிய பெரிய தண்டனை மன்னிப்பு. மன்னிப்பை போல ஒரு தண்டனை இருக்க முடியாது சீசர் சொல்லியிருக்கிறார்.
தன்னை காட்டிக் கொடுத்த சீடனை கூட மன்னித்த மாமனிதர் யேசு பிறந்த இந்த நாளில் உலகம் கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தில் உலக மக்கள் எல்லாருக்கும் பணிவாக நான் கேட்டுக் கொள்வது என்னான்னா மன்னிப்போம் மறப்போம்.
இன்னைக்கு யாராவது கேக் மற்றும் பலகாரம் ஏதாவது கொண்டு வந்து தாரதா இருந்தா மாலை 6.30க்கு முதல்ல கொண்டுவாங்கப்பா. நான் என்றால் இதுவரைக்கும் யாருக்கும் பண்டிகை பலகாரம் கொடுத்ததில்லை ஏன்னா அப்படி கொடுத்தா உலகத்துல இருக்கிற எல்லா பண்டிகைக்கும் இல்ல கொடுக்கனும். அது நான் பெற்ற பாக்கியம். பொதுவாக வானொலி தொலைக்காட்சி தொகுப்பாளராக கடமையாற்றும் ஒருவர் எல்லா பண்டிகையையும் கொண்டாட வேண்டியது கடமை.
பொருளாதார சிக்கல்கள் நீங்கி, பயங்கரவாதம் அடியோடு அழிந்து, உலகெங்கும் சமாதானமும் சந்தோசமும் நிலைத்திருக்க எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
பி.கு - பிறக்கப்போகும் புது வருடத்தில் பதிவுலகத்திற்கு பாசத்தோடு சொல்கிறேன். மதச்சார்பான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரண்டு இனத்தவர்கள் முட்டி மோத களம் அமைக்கும் விதமான பதிவுகளை தவிர்ப்போம். இனச்சார் மதச்சார் நிறச்சார் கொள்கைகளை ஒழித்து புதுவருடத்தில் புதிய சிந்தனைகளை பதிவுலகம் பதிய முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
5 COMMENTS:
பிரபல்யம் விரும்புவோர் எப்போதும் தன் சுயத்தையும் தான் சார்ந்த சமூக மத நம்பிக்கைகள், விழுமியங்களை யும் தாரை வாற்பதுதான் முதல் விஷயம். நிங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை.. இதனை தவிற்பதட்காகவே மிக பிரபல்யமான அறிவிப்பாளர் உச்சத்தில் இருக்கும்போதே விலகி கொண்டார்... மதிப்பது வேறு பின்பற்றுவது வேறு என்பது கூட தெரியாமல் போனால் ரொம்ப கஷ்டம்..
ham//பிரபல்யம் விரும்புவோர் எப்போதும் தன் சுயத்தையும் தான் சார்ந்த சமூக மத நம்பிக்கைகள், விழுமியங்களை யும் தாரை வாற்பதுதான் முதல் விஷயம்.//
அநாதையான பின்னூட்டத்திற்கு,
பிரபல்யம் விரும்புபவன் நான் இல்லை. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
என்னுடைய எந்தவொரு கருத்தையும் விமர்சிக்கும் முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.
நன்றி
பொதுவாக வானொலி தொலைக்காட்சி தொகுப்பாளராக கடமையாற்றும் ஒருவர் எல்லா பண்டிகையையும் கொண்டாட வேண்டியது கடமை.
இது தொடர்பான விளக்கம் ஒன்றை உங்கள் ஈமெயில் க்கு அனுப்பமுடியும். உங்கள் ஈமெயில் அட்ரஸ் தரவும்..
hisham@mail.voa.lk
ஹாய் My Dear Hisham!
உங்களுக்கு வரும் அநாதையான அசிங்கமான பின்னூட்டங்கள் பற்றி பெரிது படுத்தாமல் அடுத்த படியை தொடருங்கள்.
சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் அசிங்கம்.
கருத்துரையிடுக