மனம் விட்டு பேச ஒரு உறவு வேண்டும்!

12:17 AM Hisham 0 Comments


நீங்கள் தனித்துப்போய்விடவில்லை என்பதே இந்த உலகத்தில் நாம் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடிய மகத்தான நம்பிக்கை. ஆனால் அழுத்தங்கள் மிக்க இந்த வாழ்க்கையில் தன் கவலைகளை கொட்டித்தீர்த்து மீண்டு வர எத்தனை பேருக்கு வாய்க்கிறது ஒரு திறமையான கலைஞனின் அவசரமான மரணம் மிகுந்த வருத்தம் தருகிறது. போரட்டங்கள் மிகுந்த தன் வாழ்க்கையில் ஒரு பைக் கூட வாங்க முடியாதவர் பொலிவூட்டின் சிகரங்களில் யார் துணையுமின்றி சிறகடித்துப்பறந்ததாய் படித்தேன். Sushant Singh Rajput தன் கடைசிப்படமான Chhichhoreஇலும் நம்பிக்கை தரும் வசனங்கள் பேசியவர் நண்பர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டாரே. அன்பான உறவுகளுடன் மனம் விட்டு பேசுவோம், வலி மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவோம். ஒன்றும் கைக்கூடாத போது தயக்கமின்றி மருத்துவரின் உதவியை நாடுவோம். மன அழுத்தங்கள் நீங்க யாரும் தங்கள் மனக்கவலைகளை வெளிப்படுத்தும்போது காது கொடுத்து கேட்போம். வாழ்க்கை மிக மிக அழகானது அது அற்புதமானது! #SushantSinghRajput. #RIPSushantSinghRajput

இத்தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைத்துக்கொள்ள 5 ஆலோசனைகள்

11:33 PM Hisham 0 Comments

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கிப்போயிருக்கும் நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர்.

இத்தருணம் பலருக்கும் பயம் பதட்டம் மற்றும் மனச்சோர்வை கொடுக்கக்கூடும். இறுதியில் இதன் மூலமாக நாம் நோய்  எதிர்ப்பு சக்தியை இழக்க நேரிடலாம். இந்நிலையில் இருந்து மீள உதவும் 5 ஆலோசனைகள் கீழ் காணும் வீடியோ பதிவில்.