ஆபத்தான ஆடுகளம்.
இன்று (27.12.2009) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தொலைக்காட்சி ரசிகனாக மாறி ஏமாந்த கதை! ஒரு ஊடகவியலாளன் ரசிகனாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் நல்ல ஊடகவியலாளனாக வர முடியும். இன்று ஒரு நாள் முழுமையாக மாறிப்பார்த்தேன்.
ஒரு சில வேலைகள் மட்டுமே இருந்ததால் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒரு நாள் போட்டியை ரசிக்கலாமென்று முதல் நாளே யோசித்திருந்தேன். வருடத்தின் கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்படும்னு யார் நினைச்சா? நேந்து விட்ட ஆடு விஜய் படத்தை பார்க்க போற மாதிரி இப்போட்டி முடிவு தீர்மானிக்கப்பட் ஒன்று. ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இருந்தாலும் ''அது போன வாரம்'' ன்னு வடிவேலு ஸ்டைல்ல எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு தைரியமா பாக்கலாம்னு உட்கார்ந்தால் முதலாவது பந்திலே போல்ட் செய்யப்பட்டார் தரங்க. டில்சான் ஜயசூரிய இருந்த நம்பிக்கையில் உறுதியாக அமர்ந்திருந்தேன். மிட் நைட் மசாலா சிக்கலுக்கு நான்காவது போட்டியில் துப்புக் கொடுத்த இருவரும் இந்த போட்டியிலும் சொதப்பிருவாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற. அதாங்க நான்காவது போட்டிக்கு முதல் நாள் அதிகாலை இரண்டு மணி வரை இரவு விடுதியில் ஆடிப்பாடிவிட்டு வந்ததா சொன்னாங்களே. அந்த படங்கள் வலையுலகில் வட்டமடிப்பதாய் அறிந்தேன்(ஆர்வமுள்ளவங்க தேடிப்பாருங்க).
இலங்கை அணியின் விக்கட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கியது. 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது தான் ஆடுகளம் தன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகம்கொடுப்பதில் சிரமப்பட்டதை தொடக்கத்தில் அவாதானிக்கக் கூடியதாய் இருந்தது. ஆடுகளத்தில் பதிகிற பந்து வழக்கமாக மேலெழும்பும் அளவை விட உயரமாக வந்ததால் 23ஆவது ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. க்ளைமெக்ஸில் போட்டி நடுவர்கள், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எல்லாருமா கூடி என்னோட ஞாயிற்று கிழமை உல்லாசத்துக்கு கும்மியடிச்சிட்டாங்கப்பு. கொல்டா ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு ஆபாத்தானதாக கருதி போட்டி கைவிடப்பட்டது.
இந்தியா தோத்துப்போனா வீரர்கள் வீட்டுக்குத்தான் கல்லடிப்போம் இப்பதான் மைதானத்துக்கு அடிக்கிறோம். ஐ ஜாலி!
கொல்டா மைதானம் மோசமான ஆடுகளம் என்று பல முறை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது. கடந்த ஒக்டோபரில் நடந்த செம்பியன்ஸ் லீக் போட்டியின் போதும் கவுதம் கம்பீர் இம்மைதானத்தை விமர்சித்திருந்தார்.
இந்த லட்சனத்துல 2011 உலகக்கிண்ண போட்டி இங்கும் நடக்குமாம். அடுத்த சர்வதேச போட்டித் தொடர்களுக்கு முன் இந்திய கிரிக்கட் சபை மைதான ஓழுங்கமைப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தினால் நல்லது இல்லைன்னா திடீர்ன்னு கரன்ட் கட்டாகிடும்.
+++++
தொலைக்காட்சியில் அலைவரிசை மாற்றிக்கொண்டிருந்தேன். திடீர்னு பாத்தா ஏதோ வாக்கு வாதம் நடந்துகிட்டிருக்கு. ரிமோட் கொன்ரோலை உட்கார வைச்சிட்டு வேடிக்கை பார்த்தேன். (எங்க வீட்ல கேபிள் TV கிடையாது)
நட்சத்திர பாடகர் தெரிவாம். ஒருத்தர் பாடுறாரு அப்புறம் நிகழ்ச்சி நடத்துறவரு நடுவர் கிட்ட கேள்வி கேட்குறாரு அதுவும் எடக்கு முடக்கான கேள்வி. குறித்த ரெண்டு பேருல யாரு தெரிவாகுவாங்க? sms முடிவு வேற மாதிரி சொல்லுதே. அதுக்கு அந்த நடுவர் சொன்ன பதில் sms ஐ வைத்து முடிவு பன்றதா இருந்தா நடுவர்கள் எதற்கு?
நியாயமான கேள்வி. பாட்டு பாடுற நடுவர் ஐயா உங்க பதிலுக்கு பிறகு தானே புரிஞ்சது உங்க ட்ராமா.(இந்த படத்த ஏற்கனவே நாங்க பாத்துட்டோம்ல) ஓரிரு வாரத்துக்கு முதல்ல சிங்கள அலைவரிசை பாட்டு போட்டியிலயும் இதே மாதிரி ஒரு வாக்குவாதம் அந்த நடுவர் சொன்னதும் இதே பதில்தான் தொகுப்பாளர் கேட்டதும் இதே கேள்விதான். (ரீமேக்கா இருக்கும் போல)
வருந்தத்தக்க அணுகு முறை.
இப்படித்தான் பர்வையாளர்களை அதிகரிக்கனுமா? போட்டியாளர்களும் நடிகர்களா இருக்க மாட்டாங்களான்னு என்ன உறுதி?
முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒரு போட்டியா இருக்க வாய்ப்பில்லையா? sms அனுப்புகிறவர்கள் முட்டாள்களா?
நடுவர்களாக வந்தவர்கள் இலங்கை பாடகர்களா அல்லது நடிகர்களா? (நடிக்க வந்த பாடகர்களா, பாட வந்த நடிகர்களா? குழப்பமா இருந்தா விட்டுறுங்க)
இதுவும் ரொம்ப ஆபத்தான ஆடுகளம் இல்லையா?
ஏற்கனவே இந்த மாதிரியான நாடகத்தை தமிழகத்தின் அலைவரிசைகள் அரங்கேற்றி மூக்குடைந்த கதை உலகறிந்த விடயம். ஒரு அலைவரிசை சிம்ரனையும் இன்னுமொரு அலைவரிசை சிம்புவையும் வாடகைக்கு அமாத்தியது எங்களுக்கு தெரியாதா. தயவுசெய்து தொலைக்காட்சி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். சந்தையை பிடிக்க இதைவிட பல நல்ல வழிகள் இருக்கின்றன.
இருந்தாலும் இலாப நோக்கத்திற்காக சந்தையை முறை தவறி கையாளும் பலரும் நம் மத்தியில் இருக்கிறம்.
13 COMMENTS:
கருத்துரையிடுக