Saturday, March 6, 2010

நிலா நீ வானம்! நான் தரை!













அடேய் நல்லவனே உனக்குத்தானே ஆயிரம் விசிறிகள்
ஆரம்பமே அ(திர)டியாய் இருந்தது...

தலைநகரின் புழுக்கத்தில் தொலைத்த என்னை எங்கே தேடவா போகிறாய்?

(நிறுத்து) இனி நானே சொல்கிறேன்...

Chaட்டில் வந்து வாழ்த்தும் போதுதான் நீ அடித்த மிஸ்ட் கோல்கள் ஒன்றொன்றாய் ஞாபகத்தில் வருகிறது தோழி...

அடியே! ஏன் ரசனையை ரசிக்கும் ரசிகையே

அவ்வப்போது உன்னையும் ரசிக்கிறேன் Chaட்டில்...

ஆ! அதில் நான் உன் தீவிர ரசிகன் தெரியுமா?

நிலா நீ நட்சத்திரமில்லை ஆனால் நான் உன் ரசிகன்...

நிலா நீ நட்சத்திரமானால் ஊரே உனக்கு ரசிகர்கள்...

நான் மட்டும் இருந்துட்டுப்போறேன்...

நிலா நீ நட்சத்திரம்தான் என் வானத்திற்கு

தடுமாறும் போது வழிகாட்ட வருவாய் மறந்துவிட்டேன்

விழுந்தபோதுதான் தெரிந்தது நீ விடுமுறையில் போன கதை

ஓ! அப்போதாவது ஞாபகம் வந்ததேன்னு பெருமை படுகிறாய்

நான் அப்படியும் பட்டதில்லை

எனக்குள் கொஞ்சமும் ஈரமில்லை

என் இதயத்தில் பாசியும் படராது

சொன்னவள் நீ...


நான் சொல்கிறேன்...

இலட்சியத்தின் உச்சி தொட

கண்ணீரெல்லாம் வியர்வையாகி

நா வறண்டு போன என்னிடம் கவிதை பாடச் சொல்கிறாய்

அது எப்படிப் பாடுமம்மா?

இடையிடையே வரும் சின்னச்சின்ன சந்தோசங்களை மட்டும்தான்

என் சில்லறை உண்டியலில் சேமித்து வைத்திருக்கிறேன்.



நான் அங்கே வர நினைப்பதே கனவு

தூரத்திலிருந்தே உன்னை ரசிக்கும் ஏழை ரசிகன்

நிலா நீ எப்போது வருவாய் என் அருகே?

உன்னுடன் நிறைய பேசனும் சிரிக்கனும்

எந்த தோளில் சாய்வதென்ற குழப்பம் முன்பெனக்கு

தோளே இல்லை சாய்வதற்கு இப்போ எனக்கு

'யார் யாரோ நண்பன்' என்ற பாட்டு மட்டும் துணைக்கிருக்கு.

என் துயரம் சேர்த்து தாங்கி நீ அதிகம் துளையாகிப்போனாயோ

போதும் என் துயர் தொடர்

இன்னும் தொடர்ந்தால் Chaட்டிலும் வரமாட்டாய்

மிஸ்ட்கோலை பார்த்து நீ ஞாபகப்படுத்துகிறாய் என்கிற புன்னகை

என் உண்டியலை நிரப்பும்.



என் ஓட்டை விழுந்த இதயத்தால் உன்னை ரசித்துப்போகிறேன் இங்கே வராதே!

Share

5 COMMENTS:

என்ன கொடும சார் said...

என்ன நடக்குது?

Hisham Mohamed - هشام said...

பட்டணத்து தொடரில் தொலைந்த என் கிராமத்து அத்தியாயாத்தை தேடும் ஞாபகம் மாத்திரம்தான் வேறொன்றுமில்லை...

Aboobakker said...

என்ன நடந்தது ஹிஷாம்?..... நல்லாத் தானே இருந்தீங்க?.........
கிராமத்து அத்தியாமம்னு வேற சொல்றீங்க?..... ஆனால் ஒரு வரி தலைநகரம்னு வந்திருக்குது (LOL). என்ன செய்ய?...... வாழ்த்துக்கள் அண்ணா......

Hisham Mohamed - هشام said...

நன்றி Aboobakker.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் ஹிஸாம்

Add-Tamil