தெருவிற்கு ஆயிரம் திவ்யாக்கள்.....

PM 9:05 Hisham Mohamed - هشام 3 Comments


திவ்யா என்கிற அழகான சித்திரம் இன்று கடலை கடையில்!
சொல்லப்பட்ட ஒரு உண்மைக்கதை சிந்தித்து எழுதுகிறேன்.

எங்காவது ஒரு மனநல மருத்துவமனையில் தேடிப்பாருங்கள் திவ்யாவின் மனதை...



பல வண்ணப் பட்டாம் பூச்சிகள் மனசுக்குள் சிறகடித்துப்பறக்க காலைப் பொழுதில் முதல் நாள் உத்தியோகத்திற்கு செல்ல பஸ் எடுக்கிறாள் திவ்யா. புட்போட் கைப்பிடியை இறுக்கப்பிடித்தவளுக்கு வாழ்க்கையை வாழத்தெரியாமல் போனது வேதனை.

தான் கடமை புரியப்போகும் இடம் அவளுக்குள் ஏற்படுத்திய பிரமிப்பில் தன்னை மறந்து சிந்தித்திருக்க மாட்டாளா?

புதிய இடத்துக்கு வேலைக்கு போகிறோமே !அங்க எல்லாரும் எப்படி இருப்பாங்க, தொழில் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்க மாட்டாளா?

அம்மா அப்பா உறவினர்கள இவர்களை விட நெருங்கி சொந்தம் கொண்டாட திவ்யாவுக்கு யாரும் இல்லை அவள் கடமையின் முதல் நாள் கையொப்பமிடும்வரை.

புதிய அலுவலகம் நண்பர்கள் என தன் வாழ்க்கையில் பல புதிய அத்தியாயத்திற்கான பக்கங்கள் திறக்கப்பட்ட பூரிப்பில் திவ்யாவின் நாட்கள் திறந்தன.

வீடு அலுவலகம் வீடு என வட்டமடித்தவள் மனதின் பாஸ்வார்ட் அறிந்தவன் எவனோ லொக்இன் ஆனதில் தடுமாறிப்போனாள்.

நட்போடு ஆரம்பித்த புதிய உறவு பல படிநிலைகளை கடந்து சினிமா அரங்கு வரை வளர்ந்தது.

இந்த காதல் நாடகத்தில் முழ்கிப்போயிருந்தது திவ்யாவின் மனது.

'' இவளத்தான் கட்டிக்கப்போறேன்'' என்ற போலியான வசனம் தனக்கு ஒரு முகவரி கொடுத்ததாய் நினைத்தவள் ஏமாற்றமடைந்தாள் ரயில் தண்டவாளம் புரண்டதில்.

அலுவலகத்தில் தனித்துப்போனவள் மனதுக்குள் அடக்கி வைத்ததை யாருக்கும் சொல்லவில்லை. தனிமையை விரும்பினாள், சந்தோசத்தை மறந்தாள், கடமையில் கவனம் சிதறியதால் வேலையை விட்டு தூக்கப்பட்டாள்.

இதை விட இழப்பதற்கு ஒன்றுமில்லாதது போல அலுவலக வாயில் கதவருகில் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்களையும் குழி தோண்டி புதைத்துவிட்டு புறப்பட்டது திவ்யாவின் உடல்.

வீட்டிலும் இவள் நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாகத்தான் இருந்தன. பெற்றோரிடமும் கதைப்பதில்லை தன் அறைக்குள் இருந்து வெளியே வருவதுமில்லை. தன் மனசுக்குள் இருப்பதை சொல்ல எத்தனித்ததுமில்லை. யாருக்கும் அவள் மனது தெரியாது.

அன்றொரு நாள் அதிகாலைப்பொழுதில் திவ்யாவின் அப்பா கையில் பையுடன் அவசரமாக புறப்படுகிறார். பல நாள் சவரம் செய்யாத முகத்துடன் தான் இறங்க வேண்டிய இடத்தை சொல்லி பஸ் நடத்துனரிடம் டிக்கட் வாங்கிக்கொண்டவர் ஜன்னலோரம் தலையை சாய்த்தார். யோசனைகளில் தன்னை மறந்து இறங்கும் இடத்தையும் மறந்துவிட்டார்.


'' ஐயா மனநல மருத்துவமனை வந்துட்டு இறங்குங்க '' என்றார் பஸ் நடத்துனர்.

ஒபாமாவும் நானும்.

PM 6:22 Hisham Mohamed - هشام 8 Comments




இன்று மின் காந்த அலைகளில் நான் இல்லை. ரொம்ப யோசிக்க வேணாம். வானொலி தொலைக்காட்சி எல்லாத்துக்கும்; இன்னைக்கு ஓய்வு கொடுத்து இயற்கையை சுவாசிக்கிறேன்.

ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு ஓய்வு. என்ன கொஞ்சம் வேலை இருந்தது இருந்தாலும் ரிலாக்சாக முடிச்சுட்டன்.

பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. பதிவுலகில் நான் காணாமல் போன நாட்களில் எத்தனையோ விடயங்கள் நடந்திருக்கும். அப்புறம் நிறைய பேர் விருதுகளெல்லாம் தந்திருந்தீங்க கொஞ்ச கொஞ்சமா தேடிபிடிச்சு ஏத்துக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்கனும். இன்னும் நிறைய பேசுவோம் வரும் ஞாயிறு (23) வலைப்பதிவர் சந்திப்பில்.

கொஞ்ச நாளைக்கு முதல்ல எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதுல இருந்த விடயங்கள முழுமையா படிச்சதுக்கப்புறம் அனுப்பியவருக்கு பதில் மடல் அனுப்பி அந்த உண்மைக் கதையை முழுமையாக தெரிஞ்சிக்கிட்டு எழுதி வைச்சிருக்கேன் ஒரு பதிவு. சில மாற்றங்கள் செய்து விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .

அது இருக்கட்டும் அப்பு ஓபாமாவை எதுக்கு கூப்பிட்டீங்க?

அது ஒன்னுமில்ல மனுசன் இப்ப குடும்பத்தோட செம ஜாலியா விடுமுறையில இருக்காரு நானும் இன்னைக்கு விடுமுறை பாருங்க அதுதான்.

பொருளாதாரம், சுகாதாரம், G20 மாநாடு என பல அலுவல்களுக்கு மத்தியில் இப்பதான் ஒபாமா கொஞசம் ஓய்வெடுக்கிறார்.



மனைவி பிள்ளைகளுடன் அமெரிக்க ஜனாதிபதி இப்போ இயற்கை தளங்களை பார்வையிடுகிறார். இறுதியாக தன்னுடைய குடும்பத்தாரோடு கிராண்ட் கெனியோன் என்கிற மலைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார் ஒபாமா.



கிராண்ட் கெனியொன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் இருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடம். அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய தேசிய பூங்காவும் இங்கேதான் இருக்கிறது.


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டும் தான் பதவியில் இருந்த போது ஓய்வு நேரங்களை அதிகம் கழித்தது கிராண்ட் கெனியொனின் முக்கிய இடங்களில்தான். நம்ம சூப்பர் ஸ்டார் அடிக்கடி இமயமலைக்கு போற மாதிரி அமெரிக்கர்களுக்கு கிராண்ட் கெனியொன்.


இன்னும்.........