வேட்டைக்காரன் சொதப்பினால்?

00:33 Hisham Mohamed - هشام 10 Commentsஅழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று டப்பா படங்களுக்கு பிறகு இளைய தளபதி தருகிற 49வது படம் வேட்டைக்காரன். விட்ட தவறுகளை திருத்தி தன்னை நிலை நிறுத்திக்கொள்வாரா இல்லை அரைத்த மாவையே திரும்ப அரைத்து வெறுப்பை சம்பாதித்துக்கொள்வாரா. அரைச்சதத்தை பூர்த்தி செய்யப்போறவர் தோனி ஸ்டைலில் சிக்ஸ்சரோடு பூர்த்தி செய்தால் தான் பார்க்க நல்லா இருக்கும். வேட்டைக்காரனின் வெற்றி தோல்வி விஜயின் திரைத்துறையை மாத்திரமன்றி பலரையும் பாதிக்கும்னு நான் நினைக்கிறேன்.

என்னதான் ரீமேக்கோ அல்லது சும்மாவோ வந்த படங்களின் பெயரை திரும்ப வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை சின்ன ஒரு உதாரணம் வேட்டைக்காரன் இது MGR நடித்து வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம் இணையத்தில் இந்தப்படம் தொடர்பனா தகவல் தேடுபவர்கள் சிரமப்படுவார்கள். வேட்டைக்காரன் என்று டைப் செய்து ஏதாவது ஒரு தேடு பொறியில் தேடிப்பாருங்க இளைய தளபதியின் வேட்டைக்காரன் தான் முதல் 10 பக்கங்களில் வந்து நிற்கும். அதை விட வருகிற சந்ததிக்கு பழைய படம் ஞாபகத்திற்கு வராது.
எங்கேயோ ஒரு கிராமத்துல இருந்து டவுனுக்கு வாறீங்களாம் வந்தவரு பொளப்ப பார்க்காம சமூகத்துல நடக்கிற அநியாயத்தை தட்டி கேட்கிறீங்களாம். அது மட்டுமில்ல ஒரு ஆட்டோ சாரதியா வேற வாறீங்கன்னு இப்பவே நக்கலடிக்கிறாரு ராமசாமி அண்ணே. இந்த கதையை கேட்டா ரெண்டே வாரத்துல ஜெம்ஸ் கெமரூனின் அவதார் அள்ளிரும் போல இருக்கே.

தன் குரு நாதர் தரணி, குருவி படத்தில் பறக்கவிட்ட தளபதியின் புகழை கட்டிக்காக்க வந்த சிஷ்யன் இயக்குனர் பாபு சிவனுக்கு(குருவி - உதவி இயக்குனர்) இது முதல் படம். சொதப்பினால் அடுத்த படத்துக்கு ஐயா! அம்மா!
ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமான அனுஸ்கா விஜய்யுடன் நடிக்கும் முதல் படம் சொதப்பினால் அருந்ததியில் கிடைத்த பெயரும் அம்போ!

40 கோடி இந்திய ரூபாய் செலவாம் அடப்பாவமே இந்தப்படத்துக்கு இவ்வளவான்னு கேட்க மாட்டேன். ம்ம்ஹ் நம்ம மஹிந்த ராஜபக்சவிற்கு கொடுத்திருந்தா போஸ்டர் ஒட்டியே முடிச்சிருப்பார்.தயாரிப்பளர்கள் பாலசுப்ரமணியமும் குருநாத்தும் வேட்டைக்காரன் புட்டுகிட்டாலும் சூப்பர்னுதான் சொல்லுவாங்க ஏன்னா முற்கூட்டியே படத்தை சன் பிக்சர்ஸ்க்கு வித்துட்டாங்களே. சொதப்பினால் சன் பிக்சர்ஸ் நிலமை வழமையைவிட(வழக்கமா இவங்க டப்பா படத்துக்கும் டெரராதான் கூப்பிடுவாங்க) அம்மா பாருங்க ஐயா பாருங்க! தம்பி பாருங்கன்னு கால பிடிக்காத குறையாதான் இருக்கும்.
விஜய் அன்ரனி புண்ணியத்துல கொஞ்சம் ஓடும்னு எதிர்பார்க்கிற நேரத்துல சின்னத்தாமரை பாடல் காட்சியில் வந்து பயமுறுத்துறாரே தளபதி. படம் வர முதல்ல இவ்வளவு சொல்லக்கூடாது இருந்தாலும் சொதப்பினால் பாவம் சதீஸ் இன்னும் நம்பிக்கிட்டிருக்கான்.

ஏற்கனவே பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதியவர்கள் நாளை ஊகம் சரியான சந்தோசத்தில் மிதக்கப்போகிறார்கள். படம் ஊத்திகிச்சின்னா அதை கொண்டாட காக்கா பிர்யானி வாங்கி கொடுப்பாங்க முக்கியமா நம்ம லோஷன் அண்ணா 5ருபாய்க்கும் ஆயிரம் தடவை யோசிப்பாரு இருந்தாலும் கவலையே இல்லாம யோகட் வாங்கி கொடுப்பாரு.

விஜய் அண்ணே இம்புட்டு மேட்டர் இருக்கு கவுத்துடாதீங்கோ! வேட்டைக்காரன் சொதப்பினால் சுறாவுக்கு கூட்டம் வராது.

10 COMMENTS:

SShathiesh said...

உங்கள் விஜய் எதிர்ப்பு பனி மேலும் வளர்க. வேட்டைக்காரனின் வெற்றி நிச்சயம் அப்போது மீண்டும் சிந்திப்போம். அதெல்லாம் இருக்கட்டும் இங்கேயும் எனக்கு இப்படி ஒரு ஆப்பா? ஏன் இந்த கொலைவெறி....என் நம்பிக்கையில் தப்பில்லை....விஜயை தாக்கி பழகி உங்களுக்கு இப்போது நானுமா?

kasbaby said...

எதை எதையோ எழுதுகிறீர்கள்...ஆனால் விஜய் ஏன் நன்கு,குறைந்த பட்சம் மூணு சட்டை போட்டு கொண்டு வருகிறார்.-என்று எழுதினால் தேவலாம்....

Sinthu said...

இவ்வளவு விஷயம் இருக்கா? தெரியாமல் போச்சே....
படம் வந்ததும் சொல்லுங்க, பார்க்கிறதா வேண்டாமா என்று நாங்க முடிவெடுக்க வசதியாக இருக்கும்...

Shathiesh தம்பி இது ஆப்பில்ல, ஆப்பு கண்ணுக்கு தெரியாது.... உண்மை இன்று தெரியும்

ஹாஹாஹ!பயங்கரமாக சிரித்தேன்.. போஸ்டர் விவகாரம்.. விழுந்தே விட்டேன்.. அது சரி லோசண்ணா 5 ரூபாய்க்கும் கணக்கு பாப்பாரா? அப்பொ என்கிட்ட சும்மா அள்ளி விசுறுற மாதிரி அக்சன் குடுத்தாரே? யொசிக்கணும்..

நல்ல நகைச்சுவைப்பதிவு.. அனால் வேட்டைக்காரன் ஏதாவது அற்புதம் நிகழ்ந்த ஜெயித்து விட்டால் மூக்கை தேடவேண்டியிருக்கும் ஹாஹாஹ!

ஹா ஹா....

//ஒரு உதாரணம் வேட்டைக்காரன் இது MGR நடித்து வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம் இணையத்தில் இந்தப்படம் தொடர்பனா தகவல் தேடுபவர்கள் சிரமப்படுவார்கள். வேட்டைக்காரன் என்று டைப் செய்து ஏதாவது ஒரு தேடு பொறியில் தேடிப்பாருங்க இளைய தளபதியின் வேட்டைக்காரன் தான் முதல் 10 பக்கங்களில் வந்து நிற்கும். //

இது உண்மையான விடயம்...
நிறையப் படங்கள் இப்படியே மறைக்கப்படப் போகின்றன..

உங்கள் பதிவுக்கு சதீஷ் அண்ணா போட்ட எதிர்ப்பதிவும் பார்த்தேன்...

நடக்கட்டும் நடக்கட்டும்...

KULIR NILA said...

Vijay Nalla Actor than aana Pitch tha sariya amayala.

Vaalthukkal adutha pitch Kadalaukkul atha Sura athu nalla varumnum nenaikeren

Anonymous said...

இந்த மாதிரி மக்கள் தொடர்பு பணியில இருக்குறவங்க நல்லது சொன்னா எல்லாரும் கேட்பாங்க.. ஆனா அவங்க அத பண்ணாம ஏழு சட்டை போட்டு ஸ்டைல் காமிக்க தான் சொல்லி தருவாங்க... திருந்த மாட்டானுங்க...

senthils said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

eksaar said...

பாத்துட்டோமில்ல..

"வேட்டைக்காரனும் கவிக்கோ ரகுமானும்"

http://eksaar.blogspot.com/2009/12/blog-post_19.html