இருக்கிறம் - அசிங்கம்

13:39 Hisham Mohamed - هشام 18 Comments

பசியில் தவிக்கும் மாடு உணவில்லாமல் போஸ்டர் சாப்பிடும் கதையாகிவிட்டது இருக்கிறம் சஞ்சிகை.

இருக்கிறம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்! 

01-15-12-2009 இதழில் 50ம் பக்கம் வந்திருக்கும் ''ஊடக மயக்கம்'' கட்டுரை இருக்கிறம் சஞ்சிகையின் நிலையை காட்டியிருக்கிறது. யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்தார் என்பதற்காக (உங்கள் சஞ்சிகையில் இருக்கும் ஒலி ஒனி ஊடகவியலாளர்கள் அப்படி இருக்கலாம்) ஒட்டுமொத்த இலத்திரனியல் ஊடகத்துறையும் இப்படித்தான் இருக்கும் என்று பிரசுரிக்க நீங்கள் யார்? 
தூசனத்தில் எழுதிக்கொடுத்தாலும் பிரசுரிப்பீர்களா? இருக்கிறமின் கீழ்த்தரமான விற்பனை தந்திரம் இது.

வரலாற்று தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எழுதியவரது அனுபவம் கேள்விக்குறியானது.
எழுதியவர் அப்படி இருந்ததற்காய் ஒட்டு மொத்த ஒலி ஒளி ஊடகத்தையும் குறி வைத்து சுடுவது பயிற்சியில்லாமல் துப்பாக்கி தொடுகிற ஒருவரின் நிலையை காட்டுகிறது. 

சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் 

யார் செய்கிறார்கள்? பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள்.

இப்போது மழைபெய்யாததற்கு இதுகூட காரணமாம் நீங்கள் வானிலை அவதான நிலையத்தில் வேலை பார்க்க வேண்டிய ஒருவர்.

அத்தனை அசிங்கங்கள். அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் புரியும் மாய லீலைகள், மந்திரங்கள், தந்திரங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

எங்கே நடக்கிறது அதையும் சொல்லியிருக்கலாமே. எழுதி கொடுங்கள் அதையும் பிரசுரிப்பார்கள்.

மீன் மலிந்தால் சந்தைக்கு வருமே அதுபோலவாம் தற்போதைய அறிவிப்பாளர்கள் 

மலிந்து சந்தைக்கு வந்தது உங்கள் சஞ்சிகையில் வந்திருக்கும் குப்பைகள்தான். இலவச இணைப்பாய் தமன்னாவை காட்டிதான் உங்கள் சஞ்சிகை விற்பனையாகிறது. 

வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?

தேவைதான். எனக்கு தேவை அத்தனை வினாடிகளும் எனக்கும் திறமையுள்ள ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமானவை.


ஆடத்தெரியாத ஒருவரின் கவலையை அரங்கேற்றிய சஞ்சிகைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  திறமையுள்ளவர்கள் எங்கும் நிலைத்து நிற்பார்கள். 


சக பதிவர் லோஷனின் பதிவு


18 COMMENTS:

ஒருசிலர் விடும் பிளைகளுக்காக ஒட்டுமொத்தமாக ஒலி ஒளிபரப்பு துறையினையை நோக்கி கைகாட்டக்கூடாது.
சம்பந்தப்பட்டவர்களை சுட்டிக்காட்டியிருக்கலாம்.
ஒரு துறைமீது இப்படி சேறுரபூசும் இந்த கட்டுரையினை அதே துறைக்குள் இருக்கும் பொதுவான ஒரு சஞ்சிகையில்(இருக்கிறமில்) பிரசுரித்தது மிகவும் பெரிய ஒரு தவறுதான். இதுவும் ஒரு வியாபார உத்திபோலதான் எனக்குபடுகின்றது.

//ஆடத்தெரியாத ஒருவரின் கவலையை அரங்கேற்றிய சஞ்சிகைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திறமையுள்ளவர்கள் எங்கும் நிலைத்து நிற்பார்கள்//
மிகச்சரியாக சொன்னீர் ஹிஷாம்

////தேவைதான். எனக்கு தேவை அத்தனை வினாடிகளும் எனக்கும் திறமையுள்ள ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமானவை.////

தன்னாலும், தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளாலும், நேயர்கள் பயன் பெற வேண்டும், ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் குறைந்த சம்பளத்திலும், ஏன் சம்பளம் இல்லாமல் கூட தன் குரலை தியாகம் செய்யும் ஒலி / ஒளிபரப்பாளர்களை விமர்சிக்கத் தெரியாதவர்கள் இவர்கள் தான்.

(தன்னை நீக்கி விட்ட ஊடகத் துறையை ஒட்டு மொத்தமாய் கேவலப் படுத்தியதும், தனக்கு ஒரு பக்கத்தை நிரப்ப ஆக்கம் கிடைத்ததற்காக அலசி ஆராயாமல் (வாசித்துக் கூட இருக்க மாட்டார்கள் போல.....) பிரசுரித்தது தப்பான ஒரு விடயம் தான்.....)

VARO said...

நீண்ட நாட்களின் பின் பதிவு கண்டதில் மகழ்ச்சி
நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம்.

//யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இலத்திரனியல் ஊடகத்துறையும் இப்படித்தான் இருக்கும் என்று பிரசுரிக்க நீங்கள் யார்?//

இணைஆசிரியர் சஞ்ஜீத் கவனமெடுக்கவும்….

//யார் செய்கிறார்கள்? பெயர் குறிப்பிட்டு சொல்லுங்கள்.//

ஆதாரம் இல்லாமல் எவ்வாறு பொதுப்படையாக கொடுக்கத் துணிந்தார்.

//மலிந்து சந்தைக்கு வந்தது உங்கள் சஞ்சிகையில் வந்திருக்கும் குப்பைகள்தான். இலவச இணைப்பாய் தமன்னாவை காட்டிதான் உங்கள் சஞ்சிகை விற்பனையாகிறது.//

சினிமா வேண்டாம். தொடர்ந்தும் கிரிக்கட் வீரர்களின் படங்களை போடுங்கள் என்று பலமுறை கூறியிருக்கின்றேன்.

அன்புள்ள ஹிஷாம் அவர்களுக்கு,

நிச்சயமாக இது வியாபார தந்திரம் அல்லது ஒரு தனிப்பட்ட மனிதனின் புலம்பல் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

'இருக்கிறம்' பற்றி எனக்கு பெரிதாக கவலையில்லை, அவர்கள் அப்படித்தான்.

ஆனாலும் நீங்கள் அவர் கூறிய விதத்தை மட்டுமன்றி கூறிய விடையங்களும் முற்றுமுழுதாக தவறு என்று கூறுகிறீர்களா? அதாவது அவர் ஊடக துறையில் இருந்த போது அவரால் மட்டுமே இந்த தவறுகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் புனிதர்கள் 'மட்டுமே' இப்போது ஊடக துறையில் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

மாயலீலைகள், காமலீலைகள் என்பன எல்லாம் தனிமனித சுதந்திரம் என நினைப்பவன் நான். ஆனாலும் உங்களுக்கு பெயர்கள் தான் வேண்டும் என்றால் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உங்களுக்கு இருக்கிறம் மீதும் அதை எழுதியவர் மீதும் இருக்கும் கோபம் நியாயமானதே. எழுதியவரின் நோக்கமும் தவறு, இருக்கிறம் அதை பிரசுரித்ததும் தவறு.

//இதுவும் ஒரு வியாபார உத்திபோலதான் எனக்குபடுகின்றது. //
வதீஸ்வருணன் அடுத்து என்ன செய்யப்போறாங்களோ?

//தன்னை நீக்கி விட்ட ஊடகத் துறையை ஒட்டு மொத்தமாய் கேவலப் படுத்தியதும், தனக்கு ஒரு பக்கத்தை நிரப்ப ஆக்கம் கிடைத்ததற்காக அலசி ஆராயாமல் (வாசித்துக் கூட இருக்க மாட்டார்கள் போல.....) பிரசுரித்தது தப்பான ஒரு விடயம் தான்.....)//
சப்ராஸ் அபூ பக்கர் திறமையிருந்தால் வாய்ப்பு வாசல் தேடி வராதா?

வருகைக்கு நன்றி வரோ.

//மாயலீலைகள், காமலீலைகள் என்பன எல்லாம் தனிமனித சுதந்திரம் என நினைப்பவன் நான்.//
நல்லது நிமல். ஆனால் குறித்த தவறை ஒட்டு மொத்த குழு அல்லது ஒரு பிரிவின் மீது சுமத்துவது சரிதானா?

//ஆனால் குறித்த தவறை ஒட்டு மொத்த குழு அல்லது ஒரு பிரிவின் மீது சுமத்துவது சரிதானா?//

நிச்சயமாக இல்லை... எவ்வாறு இங்கு ஒட்டு மொத்த குற்றம் சுமத்தல் தவறாகிறதோ, அது போலவே ஒட்டு மொத்த மறுத்தலும் தவறு என்பதே எனது கருத்து.

அதை தவிர்த்து எந்தவகையிலும் அந்த கட்டுரையை நியாயப்படுத்துவதோ, இருக்கிறம் சஞ்சிகையின் நோக்கங்களை புனிதப்படுத்துவதோ எனது எண்ணம் அல்ல.

Anonymous said...

வைஷ்ணவி :

வாழ்த்துக்கள் ஹிஷாம்!
இருக்கிறோம் சஞ்சிகை தனது விற்பனையை கூட்டுவதற்காக இப்படி ஒரு கட்டுரையை பிரசுரித்திருப்பது கடுப்பை தருகிறது .அதிலும் இந்த கட்டுரையை எழுதியவரை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது .

எந்த துறையை எடுத்து கொண்டாலும் முயற்சியும் உழைப்பும் திறமையும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.அதை விடுத்து எல்லாம் இலகுவாக கிடைக்கும் என்று எதிர் பார்ப்பது படு முட்டாள் தனம்.

"சம்பாத்தியம் அதிகம் இல்லாவிட்டாலும், அற்ப சொற்ப சம்பாத்தியங்களுக்காக வேண்டாத வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் "

"வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் வீணாக்கும் இந்தத் தொழில் தேவைதானா?"
மற்ற மற்ற துறைகளை விட இன்று இலத்திரனியல் ஊடக துறையில் இருப்பவர்களே அதிகமாக உழைகிரார்கள்.காரணம் அவர்களின் முயற்சியும் திறமையும் தான் .ஆரம்ப காலங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்த எத்தனையோ பேர் இன்று தம் உழைப்பால் முன்னேறி நல்ல பதவிகளிலும் நல்ல சம்பாத்தியம் பெறுகிறவர்களாவும் மாறி இருக்கிறார்கள் .இது கட்டுரையை எழுதியவருக்கு தெரியவில்லையாக்கும்.

தனியாக புகழ் பெற வேண்டும் என்ற நோக்கிலும் இலத்திரனியல் ஊடக துறையை பற்றி தவறான எண்ணங்களோடும் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு கட்டுரையை எழுதியவருக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை தான் ஏற்படும்.
அதன் பிறகு ஊடக துறையை குற்றம் சொல்வதில் பயனில்லை என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் .
இருக்கிறோம் சஞ்சிகை குழுவினர் தங்கள் விற்பனையை கூட்ட வேறு ஆரோக்கியமான வழியை கையாளுவதை விடுத்து இப்படியான கீழ்த்தரமான வழி முறையை கையாளுவது சஞ்சிகையின் எதிர்காலத்திற்கு சிறந்தது அல்ல .அதை விட அவர்களும் ஊடகவியலார்கள் தான் என்பதை மறக்காமல் இருப்பது சிறந்தது .

நடப்பதை பார்த்தால் எழுத்தையும் தாண்டி ஒரு அரசியல் இங்கு நடப்பதுபோல் தெரிகிறது. எங்களுக்கு சொல்லப்படாத விடயங்கள் இங்கே நடந்திருபதும் புரிகிறது.

இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கவேண்டாமே.. cool down Hisham Mohamed

ஹிசாம், “உண்மையை உண்மையாக சொல்வதுதான் மென்மை - அதுவே மனிதத் தன்மை” அதில் என்ன தப்பு இருக்கிறது. ஊடகங்களின் ஆரம்ப காலத்;தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம். ‘சதைகள் வதைகள் ஆவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ – ஆனால் திறமைசாலிகள் வீனடிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே எனக்கு!

//நிச்சயமாக இல்லை... எவ்வாறு இங்கு ஒட்டு மொத்த குற்றம் சுமத்தல் தவறாகிறதோ, அது போலவே ஒட்டு மொத்த மறுத்தலும் தவறு என்பதே எனது கருத்து.//
லொஜிக் பேசுவதாக நினைத்து ஏதோ சொல்ல விளைகிறீர்கள்.
நிமல் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. நீங்கள் என்ன தொழில் செய்கீறீர்கள்?

//ஊடகங்களின் ஆரம்ப காலத்;தினை பாருங்கள், அங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டதாக அறிகிறேன் - ஆனால் இப்ப திறமையுடன் (திறமை இல்லாவிட்டாலும்) சதைக்கு முன்னுரிமை உண்டாம்.//
ரஜனிகாந்த் நீங்களும் அப்படித்தான் வந்தீர்களோ?

@Hisham Mohamed:
நான் ஒரு கணனி பொறியியலாளன்.

நிச்சயமாக நான் சொல்ல நினைத்தது லொஜிக் தான், ஆனால் அதை புரியும் வகையில் சொல்லக்கூடிய மொழிவளம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம்.

பொய் சொல்வதற்கும் உண்மையை சொல்லாமல் விடுவதற்குமான வித்தியாசம் தான் நான் சொல்ல வருவது.

கணனி துறையில் வேலை செய்பவர்கள் அசிங்கத்தில் ஈபடுபவர்கள் செய்வதெல்லாம் மாயாலீலலைக்ள.

நிமல் ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

கணனித்துறையில் மாயலீலைகள் செய்பவர்கள் இருக்கிறார்களா தெரியாது, ஆனால் காமலீலைகள், இடைச்செருகல்கள் இருப்பதை நான் ஒரு போதும் மறுக்கமாட்டேன்.

நான் இருக்கும் துறை என்பதற்காகவே கணனித்துறை புனிதர்கள் வாழும் இடம், எந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டிருத்தல் வேண்டும் என்பது எனது கருத்து அல்ல.

(எல்லோரும் என்ற பொதுமைப்படுத்தல் தவறு என்பதை நான் எனது முதலாவது பின்னூட்டத்திலேயே கூறிவிட்டேன்.)

ஹிசாம், ரொம்பவே ஆவேசப்படவேண்டாம்.
இனிமேலும் இறிக்கிரமில் இவ்வாரன தரமற்ற ஆக்கங்கள் வெளிவரது என்று நினைக்கிரேன்.

வணக்கம் ஹிஷாம் முஹமட்,

‘இருக்கிறம்- அசிங்கம்’ என்ற தங்களின் இந்த தலைப்பு பலவிதமான கேள்விகளை தோற்றுவிப்பதுடன், ஊடக ஒழுக்கத்தினை கேள்விக்குறியாக்குவதாய் உணர்கிறேன்.

இருக்கிறம் சஞ்சிகையில் ‘ஊடக மயக்கம்’ கட்டுரையில் ஒளி, ஒலிபரப்பாளர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட எதிர்மறையான கருத்துக்களுக்கு ஒளி ஒலிபரப்பாளனாக, ஊடகவியலாளனான எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பில் எந்தவித ஆட்சேபனையும் எனக்கு இல்லை.

ஆனால், ‘இருக்கிறம்- அசிங்கம்’ என்று தலைப்பிடுவது எவ்வாறு ஊடக தர்மமாக அமையும். ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தை வேறு விதமான வடிவத்துக்குள் தள்ளிவிட இந்த சொற்பிரயோகம் தயாராக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

குறித்த சஞ்சிகையில் பல்துறை சார்ந்தவர்களும் (நானும்) எழுதி வருகிறார்கள். தங்களுடைய ‘அசிங்கம்’ என்ற பதம் மற்றைய எழுத்தாளர்களின் சுயத்தையும் சுரண்டிப்பார்ப்பதாகவே உணர்கிறேன்.

அதாவது, ஒளி ஒலிபரப்பாளர்கள் குறித்து ‘ஊடக மயக்கம்’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்தியலை ஒத்த நிலையையே தங்களுடைய தலைப்பும் உணர்த்துகிறது.

பொதுப்படையான கருத்துக்கள் பல தருணங்களில் விவாதத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒரு விடயம் குறித்து பகிரங்கமான கண்டிக்க அல்லது மன்னிப்பு கோருமாறு கோரும் பொழுது நாங்களும் அவதானமாகவே சொற்பதங்களை கையாள வேண்டும். இல்லாத தருணங்களில் எம்மீதும் அதே தவறு ஒட்டிக்கொள்கிறது.

இருக்கிறம் சஞ்சிகையோ, நானோ, நீங்களோ அல்லது இன்னுமொரு வலைப்பதிவாளரோ அடுத்தவர் குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது அவதானத்துடன் சொற்பிரயோகத்தை மேற்கொள்வதே சிறந்தது என்பது என்னுடைய கருத்து.

மருதமூரான் தலைப்பை நன்கு அவதானியுங்கள் குறித்த சஞ்சிகையில் வந்த அசிங்கத்தைதான் கோடு போட்டு பிரித்து சொல்லியிருக்கிறேன்.

என் அவதானம் எவ்விதத்திலும் சிதாறத வண்ணம் தான் பதிவிட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.

// குறித்த சஞ்சிகையில் பல்துறை சார்ந்தவர்களும் (நானும்) எழுதி வருகிறார்கள். தங்களுடைய ‘அசிங்கம்’ என்ற பதம் மற்றைய எழுத்தாளர்களின் சுயத்தையும் சுரண்டிப்பார்ப்பதாகவே உணர்கிறேன்//

அசிங்கம் என்ற பதத்தில் இருக்கும் ஆழத்தை நீங்கள் புரிந்து கொண்டது மகிழ்ச்சி. பத்திரிகை தர்மம் தெரியாத ஒரு சஞ்சிகை பிரசுரித்த கட்டுரையில்தான் ஊடகத்துறை அசிங்கம் என்று சொல்லபட்டிருக்கிறது. அதைதான் இருக்கிறம் - அசிங்கம் என தலைப்பிட்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களின் சுயத்தை சுரண்டிப்பார்க்கும் தேவையும் எண்ணமும் என்றும் எனக்கிருந்ததில்லை.