ஆத்தா நான் ஜெயிச்சிட்டேன்.

21:33 Hisham Mohamed - هشام 9 Comments

பக்கத்து பக்கத்து கம்யூட்டர்களில் உட்காந்துகிட்டு காலையிலிருந்து சகா லோசனும் நானும் மொக்கை போடுவது வழக்கம். நடுவில யாராவது மாட்டிக்கிட்டா சிக்கி சின்னாபின்னமா போவதுமுண்டு.(ஏன் சில சமயம் நானும் கூட)வலையுலகத்துல இருக்கிற மூலை முடுக்கெல்லாம் சுத்தி ஆராய்ந்த விடயங்களை நாம் பகிர்ந்து கொள்வோம். சகா லோஷன் இருக்காறே உண்மையில இவர இப்ப எல்லாருமே பிளாக்கர்ன்னு தான் கூப்பிடுறாங்க(உங்களுக்கு தெரியாம இருக்கலாம்.) வலைப்பூவை மெய்ன்டெய்ன் பன்றதுல இவர மாதிரி என்னால முடியாது. இருந்தாலும் எங்கயாவது தேடி ஒரு மொக்கையை போட்டு சாதனை படைச்சிடுவன்.

பதிவுலகத்திற்கு வந்த பிறகு நான் கற்றுக்கொண்டது ஏராளம். என் மனதை திறந்தால் என்ன கிடைக்கும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டேன்(அதற்காக திறக்காமல் விடமாட்டேன்). சகாவுடன் எனக்கிருக்கும் ஒரு சின்ன கோபம் அவர் போடுகிற பதிவுக்கு ஊர் பேர் தெரியாத அநானிகள் எனக்கு பின்னூட்டம் வழியா பல மொழிகளில் வாழ்த்து சொல்வார்கள்(என்ன மொழின்னு தயவு செய்து கேட்டுறாதீங்க). அந்த வேதனையை நான் எங்க போய் சொல்லுவேன்.

நமக்குள்ள ஒரு போட்டி ஒரே நாளில் அதிக ஹிட்ஸை பெறுவது யார்?

2638 ஹிட்ஸ் அதிக பட்சமாக பெற்று கிட்டதட்ட 3 மாதங்கள் அசைக்க முடியாத சாதனையாக்கியிருந்தார் சகா . நினைக்காத ஒரு பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைச்சு சாதனையை முறியடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. ஏதேச்சையாக வலையில் சிக்கியவர் இளைய தளபதி வறுத்தெடுத்தில் 3298 ஹிட்ஸ் சாதனை வைத்தேன். தீடீர்னு விஜய் ஒழிக என்று கோஷமிட்டு 3424 ஹிட்ஸால் ஒரே நாளில் முறியடித்தார். அடுத்த பதிவில் மனோரமாவையும் சேர்த்து அழைத்து 3637 ஹிட்ஸால் புதிய இலக்கை எட்டியிருக்கிறேன். (எப்ப முறியடிப்பீங்கன்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னார்)

குறித்த நாட்களில் என் தளத்தை எட்டிபப்பார்த்தவர்களுக்கும் பின்னூட்டம் வழியாக வந்தவர்களுக்கும் ரொம்ப நன்றி. பதிவுலகத்துல இதெல்லாம் சகஜமப்பா(ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு)

9 COMMENTS:

ஆயிரம் ஹிட்ஸூக்கே வழி இல்ல... இதுல 3000 + ஆ........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ungalukku vera velai illaya.

vijay ozhika vachu hits vendirathu romba kettithanmungo

Risamdeen said...

கொடுத்து வச்சவங்கயா. நாங்கள்லா ஆப்பிஸ்ல எம்டிக்கு தெரியாம வலைப்பூவுல உலா வருவோம் இங்க பாருங்க வரிசையா உக்காந்து போட்டி போடுறாங்க
ஏங்க இதுக்கு பேரு வேல நேரமாண்டு ராமசாமி அண்ண கேக்கச்சொன்னாரு

வாழ்க்கை என்கிறது ஒரு வட்டம் இன்று ஜெயிக்கிறவன் நாளை தோற்பான். இன்று தோற்பவன் நாளை ஜெயிப்பான் இதை நான் சொல்லவில்லைங்கோ விஜய்தான் ஒரு படத்தில சொல்லியிருக்கிறார் என்று ராமசாமி அண்ணா சொல்றாருங்கோ

Sinthu said...

இப்படித் தான் பக்கத்தில் இருந்து கொண்டு போட்டி நடக்கிறதோ?

:)

Subankan said...

// தமிழ் பிரியன் said...

ஆயிரம் ஹிட்ஸூக்கே வழி இல்ல... இதுல 3000 + ஆ........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

றிப்பீட்டு.........

SASee said...

ஆயிரம் ஹிட்ஸூக்கே வழி இல்ல... இதுல 3000 + ஆ........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


றிப்பீட்டு.........

ones again

Nice nice go ahead!!!!