அக்கா மாலாவுக்கு ஆப்பு

20:01 Hisham Mohamed - هشام 5 Comments

கடந்த இரண்டு பதிவுகளும் இளையதளபதியின் ஆவேசத்தையும் மனோரமாவின் கொந்தளிப்பையும் விளக்கியதில் எனக்கும் சகா லோஷனுக்குமிடையிலான ஆரோக்கிய போட்டியின் சாதனைகள் திருத்தப்பட்டன.இனி சீரியஸான மேட்டருக்கு திரும்புவது நல்லது என நினைத்தேன் கிடைத்ததோ கோக்கோ கோலா. அக்கா மாலாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தனிப்பட்ட விடயம் அதற்கும் இந்த பதிவிற்கு எந்த தொடர்புமில்லை.

சர்வதேச சந்தையில் பன்னெடுங்காலமாக தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்திருக்கும் கொக்கோ கோலாவுக்கு முதலாவது ஆப்பை வைத்தது சீனா.


கேள்விக்கட்டளைகளின் 2.4 பில்லியன் டொலர்களை சீனா இம்முறை ரத்துச்செய்திருக்கிறது. இதற்கு பதிலாக சீனாவின் தேசிய தயாரிப்பான ஹீயான் பழச்சாறு தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறது. இதன் மூலமாக 40 சதவீதமான குளிர்பான சந்தையை ஆளப்போவதும் பழச்சாறு தயாரிக்கும் நிறுவனம்தான்.(பழச்சாறு உடம்புக்கு நல்லதுன்னு ராமசாமி அண்ணே சொல்லியிருக்காரு)

சுதந்திரத்திற்கு பிறகும் இன்னும் அடிமைத்தனத்தில் இருந்து மீளாதா நாடுகளுக்கு சீனா கொடுத்த ஆரம்பம் நல்ல சாட்டையடி.

குறிப்பாக அவ்வப்போது கொடியேந்தியும் சினிமாவிலும் அக்கா மாலாவுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தியா டொலருக்கு முன் சைலன்ஸ்.

இலங்கையில இத பற்றியெல்லாம் யாரும் வருத்தப்படுவதில்லை. ஏனென்றால் சிறிமாவின் ஆட்சியில் திறந்த பொருளாதார முறைக்கு முட்டுக்கட்டையை ஓவரா போட்டு நொந்து நூலானதால அனுபவம் நல்லா இருக்கு. (இப்ப மரவள்ளி கிழங்கு நாட்ட இடம் இல்லையே)

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை ஆளும் அதிகாரம் உள்ள நாடுகள் சில்லறை விடயத்தில் இருந்து பில்லியன் வரை பல வழிகளிலும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

5 COMMENTS:

என்ன பதிவுகள் அனலாக பறக்குது சார்.

ஓ அப்படியா சங்கதி. என்னதான் இருந்தாலும் கொக்கோ கோலாதான் சென்டிக்கு சூப்பர்.
என்றும் ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு!!

அப்பாடா ஒரு மாதிரியாக ஓய்ந்துட்டாங்க.

Subankan said...

இன்னும் ஒரு சிக்ஸர் வேணுமுண்ணா! ( லோசன் அண்ணாவையும் இப்ப‍தான் உசுப்பேத்திட்டு வாரன்!)

Joe said...

கோகோ கோலா குடித்தால் தான் சாப்பாடு செரிக்கும் என்று நம்பும் மடையர்கள் இந்தியாவில் ஏராளம்!