
Rain, Rain, என் மக்கள் கண்ணில் கண்ணீர் தீர்ந்தது பஞ்சம் போக்க வா
Rain, Rain, முத்துக்குமார் தீக்குளிக்கிறான் அணைக்க வா
Rain, Rain, என் தேசமெங்கும் ரத்தக் கறை கழுவ வேண்டும் வா
Rain, Rain, காஸாவிலும் தீபகற்பத்திலும் பசித்திருப்பவனுக்கு தண்ணீர் தர வா
Rain, Rain, ஈரமில்லாத ஒல்மட்டின்(இஸ்ரேலிய பிரதமர்) இதயத்தில் ஈரம் பாய்ச்ச நீ வா
Rain, Rain, அழுக்கடைந்த அரசியலை தூய்மைபடுத்த வா
Rain, Rain, கஞ்சா கடத்துறவன் அரசியல்வாதியாகு முன் வெள்ளத்தில் அவனை /அவளை அடித்துச்செல்ல வா
Rain, Rain, கண்டியிலும் கொழும்பிலும் இயற்கையை அழிக்கும் அரசியல் போஸ்டர்களை அழிக்க வா
Rain, Rain, அரசியல் உரைகளில் ஏமாற்றமடைந்த விவசாயிக்கு கொஞ்சம் ஆறுதல் தர நீ வா
Rain, Rain, வலிகள் நிறைந்த எங்கள் இதயத்தில் சந்தோசம் விளையனும் வா
Rain, Rain, ஊடகவியலாளன் இரத்தத்தில் வரைகிறான் அவன் மடிந்து போக முன் வா
Rain, Rain, வைரமுத்துவும் பா.விஜயும் அழைத்தால் வரும் நீ இந்த ஏழை கவிஞனுக்காகவும் ஒரு முறை நீ வா
Rain, Rain, நீ இப்போது வரமாட்டாய் வந்தால் நீ அழுக்காகிவிடுவாய் என்ற பயம்
Rain, Rain, நீ மீண்டும் ஒரு நாளில் வருவாய்
Rain, Rain, வந்து பார் நீ வராததற்கான வருத்தங்கள் தான் எஞ்சியிருக்கும்.
Rain Rain கோ Away Share
3 COMMENTS:
நிட்சயமாக வருத்தங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில்.....
அது வராது அண்ணா!
ஹாசிம்... மழையே... மழையேன்னு அழகான தமிழ் இருக்க... rain...rain என்று போட்டுருக்கிருக்கிறீர்கள்... பரவாயில்லை இப்போது ரெயின் என்று சொன்னால் தான் எங்களூர் குழந்தைகளுக்கு தெரிகிளது.
Post a Comment