நீங்க ஆணா? பெண்ணா?

21:37 Hisham Mohamed - هشام 3 Comments


அண்மையில் என் நண்பர் ஒருவரின் ஆச்சி வீட்ல பணிபுரிந்த ஒரு தமிழ் பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டாள். அவளது தேசிய அடையாள அட்டை இலக்கப்படி அவள் ஒரு ஆண் என்பதே அதற்கான காரணம். நம் பெயரும் புகைப்படமும் யார் என்பதை சொன்னாலும் இலங்கை தேசிய அடையாள அட்டையின் இலக்கங்கள் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை சொல்லும் என்கிற விடயத்தை இன்று வரை நான் அறிந்திருக்கவில்லை.

என்னைப்போல தெரியாமல் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு (இது என் நண்பன் எனக்குச் சொன்னது இதை விட ஒரு வழி இருந்தால் நீங்க சொல்லலாம்)

மேட்டருக்கு வாங்க

உதாரணமாக நீங்கள் பிறந்தது பெப்ரவரி மாதம் 10ம் திகதி 1984 ஆம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்கள். (ராமசாமி அண்ணே இது என்னோட பிறந்த திகதி இல்ல)

அடையாள அட்டையின் முதல் 3,4 அல்லது 5 இலக்கங்கள் இவ்வாறே பதியப்பட்டிருக்கும்

நீங்கள் பெண்ணாக இருந்தால் - 84541
நீங்கள் ஆணாக இருந்தால் - 84041

தேசிய அடையாள அட்டையின் முதல் 2 இலங்களும் பிறந்த ஆண்டை குறிக்கும் என்பது நாம் அறிந்ததே.

541,041 என்ற இலக்கங்கள் தோன்றிய விதம்?

பெப்ரவரி 10ம் திகதியானது குறித்த ஆண்டின் 41வது நாள். நீங்கள் பெண்ணாக இருந்தால் 500ஜ அதோடு கூட்ட வேண்டும். ஆணாக இருந்தால் கூட்ட தேவையில்லை.

சரியான சிம்பிள் இல்ல.

ஆனால் எனக்கு தெரியாது அந்த 500 எங்கிருந்து வந்ததுன்னு.
இப்பவே கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.

அடையாள அட்டையை கையில எடுத்துட்டீங்களா?

3 COMMENTS:

பொது விசயங்கள் எல்லாம் ஒண்டு விடாம தெரிஞ்சிருக்கிற உங்களுக்கு இது இப்பதானா தெரியும்???
Soo Funny

Anonymous said...

உங்களுக்கு இது இப்பதானா தெரியும்??

We use to remember our whole NIC No. if you want to know for what reason ask someone who did the O/L, A/L in 85 - 90.

Mano

Sinthu said...

என்ன அண்ணா இவ்வளவு காலமா தெரியாமலா இருந்தீங்க.....
எனக்கு நான்ன் அடையாள அட்டை எடுக்க முதலே தெரியும்.... அப்புறம் ms office excel இல் படிக்கும் போது கூட function எழுவது கூடச் சொல்லித் தருவாங்களே...

இப்பவாவது தெரிந்து கொண்டீங்களே..