ஹலோ ஸ்ரீ லங்கா

21:41 Hisham Mohamed - هشام 2 Commentsஹலோ பிரதர்ஸ் மன்னிக்கனும் பதிவு போட தாமதமாயிட்டு. கொஞ்சம் சுகமில்லை. இருந்தாலும் என் வலைப்பூவை அன்போடு பார்வையிட்ட நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. ராமசாமி அண்ணனோட தொந்தரவு தாங்க முடியல அவருக்காகவே இந்த பதிவை இடுகிறேன்.

"சும்மா கொடுத்தா எதயுமே இழிச்சிகிட்டே வாங்குற பரம்பரையில பொறந்துட்டோம் என்ன பன்றது."

நம்ம பரம்பரைய பத்தி கொஞ்சம் சிந்திச்சு பாத்திருக்கீங்களா? ஓ அதுக்கெல்லாம் எங்க நேரம். நம்ம பரம்பரைக்குன்னு சில பண்புகள் இருக்கு. அடுத்தவன் சொத்துல நோகாம உட்காந்து சாப்பிட்றது. அடுத்தவன் வயித்துல அடிக்கிறது. தேவை ஏற்பட்டால் தலை மேல ஏறி ஆணியும் அடிப்பாங்க. இத எல்லாத்தையும் விட இன்னுமொரு முக்கியமான விஷயம் இலவசம் என்ற வார்த்தைய கேட்டா போதும் வாயை திறந்துகிட்டு நின்னுகிட்டு இருப்பாங்க. சும்மா கொடுத்தா எதயுமே இழிச்சிகிட்டே வாங்குற பரம்பரையில பொறந்துட்டோம் என்ன பன்றது.

சீட்டே இல்லாத பஸ்ஸில் ஏறுவதென்றாலும் சரி. விஜய் நடித்த வில்லு (மொக்கை) படத்தை முதல் காட்சியை பார்க்கிறதென்றாலும் சரி நம்மவர்களை மிஞ்ச யாருமில்லை.


பூமி பொளந்தாலும் வேடிக்கை பாக்குறான் பூமிகா சிரிச்சாலும் வேடிக்கை பாக்குறான். ஏதோவொரு இந்திய சஞ்சிகை.

கோயில்ல பள்ளிவாசல்ல பிரார்த்தனைகளுக்கு பிறகு கொடுக்கப்படும் நோட்டீஸை அடிச்சி புடிச்சி வாங்குவாங்க அப்புறமா நாலடி எடுத்து வைக்கிறதுக்குள்ள குப்பையில போடுவாங்க. இத விட மோசம் சிலர் அவசியமே இல்லைன்னாலும் அவங்க பணப்பையில பத்திரமா வச்சிக்கிவாங்க ஏன் வச்சாங்கன்னு அவங்களுக்கே தெரியாது

"மண்டைய பொளக்குற உச்சி வெயில்ல நாற்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ"


ஹலோ ஸ்ரீ லாங்கா நம்ம ஊர்ல இப்ப எல்லார் வாயிலயும் இதுதான் பேச்சு பக்கத்துல இருக்கிறவன கூப்பிட்றதுக்கும் ஹலோதான். இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் இலவசமாக இணைப்புகளை வழங்க முன் வந்ததால் பழைய காதலிகளை மறந்துட்டு புதிய இணைப்புகளுக்காக மண்டைய பொளக்குற உச்சி வெயில்ல நாற்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ. பொறாமையில பேசுறான்னு ராமசாமி அண்ணே என்னை திட்டினாலும் பரவாயில்லை மனசுல பட்டது சொல்லாம விட மாட்டேன். (ஒரு வேளை என்னுடைய பார்வை தவறா இருந்தா சரியா பின்னூட்டம் போடுங்க.)

"சட்டம் படிச்ச விக்கட் காப்பாளர் 'நான் மாறிட்டேன்னு' பெருமையா சொல்லிக்கிறாரு"


புதிய தொலை தொடர்பு நிறுவனம் முகவரி இல்லாதவர்க்கெல்லாம் குறைந்த ஆதாரங்களுடன் இணைப்புகளை வாரி வழங்குகிறது. இது நல்ல ஒரு போட்டியை இலங்கை சந்தையில் உருவாக்கும் என்பதை விட தில்லு முல்லுகள் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் என்பதை பத்தாம் வகுப்பு படித்தவர்களும் அறிந்திருப்பார்கள்.

இத விட ஒரு கொடுமை என்னன்னா நம்ம நாட்டில் சட்டம் படிச்ச விக்கட் காப்பாளர் 'நான் மாறிட்டேன்னு' பெருமையா சொல்லிக்கிறாரு(அவரு மாறினா காசு கொட்டும். ராமசாமி அண்ணே மாறினா காசாக் கொட்டனும்).

புதிய இணைப்பை குறைந்த கட்டணங்களோட சலுகைக்காலமாக மார்ச் மாதம் வரை வழங்கியிருக்கும் மாயையில் பலரும் ஏமாந்துட்டாங்கப்பா. ஏற்கனவே பலருக்கும் தங்களின் பழைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்தவர்கள் மீண்டும் புதிய இலக்கத்தை அவர்களுக்கு கொடுக்க ஆயிரக்கணக்கில் செலவழிக்கணும். அந்த செலவை கவர் பன்றதுக்குள்ள மார்ச் வந்துடும்.


அப்புறம் என்ன யோசிச்சு நல்ல முடிவா எடுங்க...

2 COMMENTS:

நீங்கள் இட்ட பதிவிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இது ரொம்ப ஒவர்.
வேறு யாரும் கிடைக்கலையா உதாரணமாக கூற. விஜய் தானா கிடைத்தார்.
வில்லு படத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் மொக்கை படமல்ல அது.
படத்தை பார்க்க தெரியாதவர்கள் பார்த்தால் அப்படி தான்.

உங்களுடைய பதிவை பார்த்த உடன் பதிலளிப்பதற்கு காரணமுண்டு. நேரில் சந்திக்கும் போது கூறுகிறேன்.

அருண்

feros said...

ஐயோ இதவிட எவ்வலவோ விஷயம் நடந்துட்டுது.. பார்க்க
https://eksaar.blogspot.com