நட்சத்திர இடங்களில் நடக்கிற ஜல்சாக்கள் அம்பலத்திற்கு வருவது மிகக்குறைவு. காரணம் அநேகமானவர்கள் படித்த ஜல்சாக்காரர்கள். குப்பத்து ராமசாமி கோவிந்தன் கடையில குடிச்சிட்டு ஏரியாவையே நாரடிக்கிறான். ஏன்னா அவன் படிச்சது நாலு எழுத்து. ஆனால் மிஸ்டர் ஞானம் பக்கத்துல இருக்கிறவன் முகம்தெரியாத அளவுக்கு இருட்டுல நட்சத்திர விடுதியில அடிக்கிறது வொட்கர், பியர்னு ஏகப்பட்ட சமாசாரம். வெளியில வந்தார்னா ஜென்டில்மன் மாதிரி நடந்துகொள்வார். இவங்க ரெண்டு பேரும் பன்றதும் ஒரே மாதிரியான தப்புதான் இருந்தாலும் அது சமூகத்துல குறித்த நபருக்கு இருக்கக்கூடிய அந்தஸ்தை பொறுத்து பெயர்சூட்டப்படும்.
வார இறுதிகளில் குடும்பத்தோட போய் பாதி வெந்த ரொட்டியை மூன்று மணி நேரம் உட்கார்ந்து சாப்பிட நிறைய பேர் துரித உணவகங்களுக்கு போவது வழக்கம். அங்கே திரைக்கு பின்னால் நடக்கிற சமாசாரங்களை நீங்க தெரிஞ்சிக்க வேணாமா.
சிக்கன் சுவை கோடி
அமெரிக்காவின் சிக்கன் துரித உணவகம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
சிக்கன் துரித உணவகத்தின் முகாமையாளர் வழக்கம் போல தன்னுடைய கடமைகளை ஆரம்பிக்கிறார். இணையத்தளத்தில் அன்றைய தினம் வந்திருந்த மின்னஞ்சல்களை பார்வையிட்ட அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ராமசாமி அண்ணணுக்கு வாரதவிட சில நல்ல ஜல்ஸா படங்களும் ஒரு செய்தி குறிப்பும் வரையப்பட்ட ஒரு மின்னஞ்சல்.
நீங்க ரொம்ப ஆவலாக எதிர்பார்ப்பதால் முழுமையான விபரங்களை தருகிறேன்.
அப்படி இந்த சிக்கன் துரித உணவகத்தில் என்ன நடந்தது?

பணி நீக்கம் செய்யப்பட்ட கலிபோர்னியவைச்சேர்ந்த இரண்டு பெண்களும் மற்றுமொருவரும் இந்த உணவகத்தின் சமையலறை பகுதியில் கடைமையாற்றி வந்திருக்கிறார்கள். ஒரு நாள் இந்த மூன்று பேரும் சமையலறை தொட்டியில் உல்லாசமாக குளித்தது மாத்திரமல்லாமல் அதை படமெடுத்து இணையத்தளத்தில் பதிவு செய்திருக்கிறர்கள்.
இந் படங்களுக்கு இணையத்தில் வழங்கப்பட்ட தலைப்புகள். (மன்னிக்கனும் இதை தமிழாக்கம் செய்தால் அர்த்தம் பிழைத்து விடும்.)
"OOO moments"
"hot tub"
"haha OOO showers!"
"haha we turned on the jets".

பொழுதுபோக்காக இந்த கோமாளிகள் செய்கிற இந்த அருவறுக்கத்தக்க செயல்கள் நகைச்சுவைக்கான விடயங்கள் இல்லை. சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை இது போன்ற ஜல்ஸாக்கள் ஒழிக்கப்பட வேண்டும். Share

2 COMMENTS:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் அண்ணா
Post a Comment