மெக்சிக்கோ அழகியின் தெரியாத பக்கம்.

12:13 Hisham Mohamed - هشام 4 Comments

ராமாசாமி அண்ணே முதல்லே சொல்லிட்டேன் தலைப்பை பாத்துட்டு அடிச்சி புடிச்சி ஓடி வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல.சூப்பரா இருக்காங்கல்ல. நல்லா சொடுக்கி பெருசா பாத்துகிங்க ஏன்னா இவங்கள இனி கண்ணாடியோடு சுருக்கு விழுந்த முகத்தோடதான் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன். தெரியாத பக்கத்தை தெரிஞ்சிகிறதுக்கு முதல்ல தெரிஞ்ச பக்கத்த தெரிஞ்சுகிங்க.

1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சினாலோ என்கிற இடத்தில் பிறந்த லாரா ஸுனிகாவுக்கு (Laura Elena Zúñiga Huizar) இப்ப வயது 23. இவர் அழகில் மயங்காதாவர்கள் இவர் பிறந்த சினாலொவில் இருக்க முடியாது. இந்த வருடம் மெக்சிக்கோவின் சினாலோவில் நடந்த அழகி போட்டியில் பட்டம் வென்று மெக்சிகோ அழகு ராணி பேட்டிக்குத்தெரிவாகி 3ம் இடத்தை பிடித்தார் ஸுனிகா. இதன் மூலமாக 2009 உலக அழகி போட்டியில் பங்கபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் என நம்பப்பட்டது. அழகியின் தந்தை ஸ்டீபனுக்கு தன் மகள் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் இருந்தது. பாவி பய புள்ள பாதியிலயே எல்லாத்துக்கும் பிரேக் அடிச்சிடுச்சி.இனி தெரியாத பக்கம்


டிசம்பர் 23ம் திகதி ஸுனிகா மற்றும் அவருடைய காதலன் உட்பட 7 பேர் மெக்சிக்கோ பாதுகாப்பு பிரிவினரால்கைது செய்யப்படுகிறார்கள்.ஸீனிகா தன்னுடைய காதலன் உட்பட 7 பேருடன் வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் தொடர்பான தகவல் அறிந்த பாதுகாப்பு பிரிவினரால் இவர்களுடைய வாகனம் வழிமறிக்கப்பட்டது. சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவான ஆயுதங்களையும் 53 300 டொலர்களையும் கைப்பற்றினர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட அழகி ஸுனிகா கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது அழகி ஸுனிகா தன்னுடைய காதலன் தன்னை கடத்தி கொண்டு சென்றதாக கதை சொல்லியிருக்கிறார். மெக்சிக்கோ அழகி போதைபொருள் கடத்தல் குழுவை வழிநடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ளுர் அழகிப்பட்டமும் உலக அழகி போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பமும் பறிபோகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.


பில்லா படம் பாத்த மாதிரி ஒரு பீலிங். நயன்தாராவை உலக அழகியாக நினைச்சிடாதீங்க சம்பளத்தை ஏத்திரப்போறாங்க.

4 COMMENTS:

sinthu said...

Azhaku Aapaththu enru ithaiyum thaan solvaarkalo?

Anonymous said...

அழகிய தகவலுக்கு நன்றி. நயன்தாரால்லாம் இனி சம்பளத்த ஏத்த முடியாது. இப்ப சினிமா இன்டஸ்ட்ரி இருக்கற நெலமைல ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கறதே பெர்ர்ர்ய வெசயமா இருக்குதாம். லிங்குசாமி அப்பீட்டானாமாதிரி இன்னும் எந்தெந்த தயாரிப்பாளர்கள் 'கோடி' கேட்கும் நடிகைகளப் பாத்து ஓடி ஒளிக்கப்போறாய்ங்களோ தெரியல.
-அநபாயன்.

//
இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ளுர் அழகிப்பட்டமும் உலக அழகி போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பமும் பறிபோகும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
//

அய்யோ பாவம்.

:)