''தலையில்லா முண்டங்கள்'' -

11:40 Hisham Mohamed - هشام 2 Commentsஇலங்கை முஸ்லிம்களின் அவல நிலை. தலை இருந்தும் முண்டங்களாய் இன்னும் எத்தனை காலத்திற்கு வாழப்போகிறோம்?

இலங்கையில் ஹிஜாபிற்கான தடை வெகு தொலைவில் இல்லை. இனி பெண்களுக்கு பதிலாக தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆண் தலைவர்கள் அணியட்டும் ஹிஜாப். இறை வணக்கத்திற்கான அழைப்பிற்கு ஆப்பு வைச்சு ரொம்ப நாளாச்சு. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கு சொல்லி என் தலைக்கு ஆபத்து வந்தா????????? முகப்புத்தகத்தில் நான் படித்த அஸ்மினின் கவிதை. இவர் யாரென்று எனக்கு தெரியாது. சிந்திக்க வைக்கிற கவிதை என்பதால் என் பதிவில் இடம் ஒதுக்குகிறேன்.

கொஞ்ச காலத்திற்கு முதல் இலங்கையில் அநேக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் நிலையை இந்தப்படம் எடுத்துக்காட்டுகிறது. (முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் இலைகள் கொண்ட பசுமையான மரம்.)

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனேதந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-

'தங்கத்தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'

தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!தலைவர்நாம் என்றவர்கள் தXXXXX முன்னாலே

தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்

தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்

தருவாரே சில எலும்பு அதற்கு!தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்

தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்

தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்

தடுமாறும் எம் வாழ்க்கை தரிசு!தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க

தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்

தலைதப்பினால் போதும் என்கின்ற கோழையரை

தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது

தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்

தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்

தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு

தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்

தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க

தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!


நன்றி - Asmin Uthumalebbe

2 COMMENTS:

Anonymous said...

இந்த பதிவு முஸ்லீம் காங்கிரசை இலக்கு வைத்ததாக தெரிகிறது. இது பாரிய பிழையாகும்.

முஸ்லீம் காங்கிரஸ் இவ்வாறான எந்த நிகழ்வுக்கும் சோரம் போகவில்லை. இன்று சம்பிக்க ரணவக்கவுக்கு இருக்கும் அதிகாரம் வேறு யாருக்கும் இல்லை. அஸ்வர் (மறை கழன்ற வர்ணனையாளர்) அத்தாவுல்லா, அமீர் அலி, ரிஷாத், ஹிஸ்புல்லாஹ், பெயர் முஸ்லீம் அலவி (பீ ஜே நாடு கடத்த இவரும் ஒரு காரணமாம்) மற்றும் பலரால் ரணவக்கவை அடக்கி வைக்க முடியவில்லை. சேகு இஸ்ஸடீன் அளவுக்கேனும் இவர்களுக்கு துணிவில்லை..

ரணவக்க அரச ஆசீர்வாதத்தில் ஆடுகிறார். இவர்கள் பக்கவாத்தியம் மற்றும் தாளம். பெரியவர் அனுசரணை..

அதேவேளை பெருந்தலைவர் புராணம் பிச்சைகார அரசியலுக்கு தான் சரி. வேண்டுமென்றால் அவரை ஒரு முன்னுதாராணம் ஆக கொள்ளலாம். இந்த "பாசறையில் வளர்ந்த கதை" எல்லாம் தமிழ் நாடு அரசியலை பின்பற்றிய கோமாளித்தனம். அது தவிர இஸ்லாம் தனி மனித வழிபாடை ஏற்றுக்கொள்ளவில்லை. நபிகள் நாயகம், நான்கு கலீபாக்கள் மற்றும் பலரால் வளர்ந்த இஸ்லாமிய அரசு கூட ஏற்ற இறக்கங்களை சந்த்டிதிருக்கிறது என்பது கூட தெரியவில்லையா? இன்றைய தலைவரை சுயமாக இயங்க விடுவோம்.. பிடிக்கலன்ன வோட் போடாதீங்க.. அதுதான் மெயின் பிளக்.

முஸ்லீம் காங்கிரஸ் எவ்வலவு பிரபல்யம், எவ்வளவு விரும்ப படுகிறது என்பதற்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் பின்னான எல்லா தேர்தலும் உதாரணமாகும்,

அடுத்து கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலும் பல கூத்தாடிகளுக்கு சாவு மணியடிக்கும்..

குறித்து வையுங்கள்..

கிழக்கு மாகாண மக்கள் முழு இலங்கையிலுமே அரசியல் தேர்ந்த மக்கள்..

Anonymous said...

இந்த நியாஸ் மவுலவி சிரச டிவி இல் ஒரு ஜோகர்.,. அவர் இஸ்லாத்தை பேசுவதை விட ஜோக் சொல்லுவதையும் மற்ற மத சுலோகங்களை சொல்வதிலும் தான் அக்கறை..
அவர் ஹஜ்ஜு பெருநாள் விழாவில் உள்கியா தொடர்பாக பேசினாராம். எந்த பத்திரிகையில் வந்தது? எந்த டிவி அதை ஒலிபரப்பு செய்தது? சும்மா பம்மாத்து.. விழலுக்கு இறைத்த நீர்..

இந்த வர்ணனையாளர் அஸ்வரிடம் கேளுங்கள்.. துருக்கியில் நீல பள்ளிக்கு பெரியவர் போனாராம். ஏன் அவர் பள்ளிக்குள் இருக்கும் பொது எடுத்த புகைப்படம் வீடியோ இங்கே காட்ட படவில்லை?