இது காதலா காமமா?

13:44 Hisham Mohamed - هشام 5 Comments

அண்மையில் நான் படித்த மனிதர்களில் எனக்கு பிடித்த அத்தியாயங்கள் பலவற்றை கொண்ட ஒரு புத்தகம் தீபன். நல்ல ஒரு இலக்ரொனிக் ஓவியர்(இன்னும் வெளியுலகம் அவரை சரிவர அறியவில்லை). வார இதழ்களில் கார்டூன்களை அரங்கேற்றி வருகிறார். அவர் வரைந்த ஓவியம் என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது உடனே பதிவெழுத ஆரம்பித்துவிட்டேன்.


(படம் - தீபன்)


நாய்களைப்போல மனிதர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ள அரசாங்கங்கள் இடம் கொடுப்பதேனோ புரியவில்லை.

ஒரு சின்ன பையன் தன் அம்மாவிடம் '' அம்மா ஏன் இங்க நிறைய பேர் மழையே இல்ல சோடி சோடியா குடை பிடிச்சிகிட்டு இருக்காங்க'' என்று கேட்குறான். அந்த அம்மாவால எப்படி பதில் சொல்ல முடியும். ஒரு தாயாக அல்லது தந்தையாக உங்களுடைய கேள்வியின் நாயகன் அதான் உங்க பிள்ளைக்கு கடலின் கடற்கரையின் பூங்காவனத்தின் அழகை ரசிக்கச்செய்ய உங்களால் முடியுமா?

காதல் உலகத்திலே ரொம்ப புனிதமானது ஒத்துகிறேன். ஆனால் காதல் வேற காமம் வேற. காம சோடிகளின் ஒத்திகைக்கு பொது இடங்கள் என்ன சாபக்கேடா. உலகத்தின் மிக மோசமான விபச்சார குடில்களுக்கு இறைவன் கொடுத் தண்டனை சுனாமி. தாய்லாந்து பெண்களை விற்று வருமானம் தேடுகிற பொட்ட நாடு. பத்தாயா கடற் கரை அதற்கு பெயர் போன இடம். புடவைக் கடைகளில் பெண் பொம்மைகளை வித்தியாசமான ஆடைகளோட பார்த்திருப்போம். ஆனால் அங்கே பெண்களை அரைகுறை ஆடைகளோடு விலை குறித்து வாடகைக்கு வைத்திக்கிறார்களாம். இந்துனேசியா உயிரூட்டமுள்ள நில அதிர்வுகளை கொண்ட நாடு. இங்கே கடற் கரைகளை காமக்கரைகள் என்று சொல்லலாம். பொறுமையிழந்த இறைவன் சுனாமி எனும் சுத்தமான நீரால் கொஞ்சம் கழுவி வைத்தான். மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடிக்கடி அவர்கள் சந்திக்கிற நில அதிர்வுகள் வெறும் எச்சரிக்கைகள் மாத்திரம்தான். இன்னுமொரு பத்தாயாவாக உருமாறுகிறது இலங்கையின் பம்பலபிட்டி (தலைநகரில் அமைந்திருக்கும் ஒரு இடம்) சீனாவின் பிச்சைக்காரிகள் இங்குதான் AC அறைகளில் தங்கியிருக்கிறார்கள். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிறகு பம்பலபிட்டி பத்தாயாவாக மாறுகிறது. சந்திக்கு சந்தி சொகுசான கார்களுக்கு கை காட்டும் சீன பிச்சைக்காரிகளை நான் பார்த்திருக்கிறேன்.(வெற்றி FM இரவு நிகழ்ச்சி முடிஞ்சு போற நேரம் பார்த்திருக்கேன் )
இதை பொறுப்பான பதவிகளில் உள்ள நல்லவங்க கண்டும் காணமல் போறாங்களோன்னு எனக்குள்ள ஒரு சந்தேகம்.(பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப வழியாக கூட இருக்கலாம்) ஒன்று மட்டும் உறுதியாக சொல்லுவேன் பம்பலபிட்டி தாய்லாந்தின் பத்தாயாவாக மாற இன்னும் ரொம்ப காலம் தேவையில்ல. பகல் பொழுதுகளில் ஒழுக்கமான குடும்பப்பெண்களின் அரைநிர்வாண ஆடைகள் நடவடிக்கைகள் மட்டுமல்லாது இலங்கையில் அதிக கிளப்களையும் பப்புகளையும் கொண்ட இடமாக பெயர் பெற்றுக்கொண்டதும் இதுக்கு நல்ல சான்றுகள்.

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு நல்ல ஒரு இடத்தை கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமானால் நாளைய இலங்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.

இலங்கை சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு.

5 COMMENTS:

Anonymous said...

Good... keep it up.

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Ilangan said...

ஹிசாம் அண்ணாவிற்க்கு வணக்கம். புதிதாக ஆரம்பித்திருக்கிற எமது வலைத்தளத்திற்க்கு ப்ளாக்கில்; ஒரு இணைப்பு தர முடியுமா? தயவு செய்து உங்களுடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.www.ilangan.blogspot.com

பம்பலபிட்டி, வெள்ளவத்தை வீதிகளில் பல சீன விபச்சாரப் பெண்களைப் இரவு நேரங்களில் பார்த்திருக்கிறேன். இன்றல்ல சும்மார் 16 வருடங்களுக்கு முன். பல ஓட்டல்களும் இதற்காகவே பிரத்தியோகமாக இயங்குகின்றன. இதில், பிறநாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, உள்நாட்டுப் பெண்களும் ஈடுபடுகின்றனர். இது யுனிவேர்சல் புராம்ளம்.

-வீணாபோனவன்.

Mr.TH said...

ஹிஷம், நீங்கள் சொன்னது சரி, சீனர்கள் மட்டுமல்ல நமவர்கள் கூட அந்த பகுதிகளில் காண்பது மன வருத்தம் தான். என்ன செய்ய, நான்கு சுவருக்குல் நடக்க வேண்டிய விஷயம் இப்படி நடக்குது.. எல்லாம் நாகரீக வளர்சியாம், மேல்நாட்டு மோகமாம்.
எனினும், நீங்கள் சொன்ன
"உலகத்தின் மிக மோசமான விபச்சார குடில்களுக்கு இறைவன் கொடுத் தண்டனை சுனாமி"
- வார்த்தைகளை ஏற்று கொள்ள முடியாது, என்னெனில் சுனாமி, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளையும் விடவில்லை. உங்கள் கூற்று படி, இலங்கை, இந்தியா கூட அந்த பட்டியலில் போல. but நம்மவர் அந்த நிலைக்கு என்னும் செல்லவில்லை.