
ஒரே நிகழ்வு இரண்டு முறை ஏற்பட்டால் அது எதிர்பாராத நிகழ்வு. ஆனால் திரும்பத்திரும்ப நான்கு முறை அதே நிகழ்ந்தால் அது எப்படி எதிர்பாரா நிகழ்வாகும்?
(தப்பா நினைக்காதிங்க கௌதம் மேனன் அவ்வளவு மோசமானவர் இல்ல)
ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களுக்கென்று ஒரு சில முத்திரை குத்தப்பட்ட விடயங்களை படத்தில் வைத்தி;ருப்பார்கள். இயக்குனர் மணிரத்னம் திருமணத்தின் பின் கணவன் மனைவி உறவை அவருடைய அனேகமான படங்களில் காட்டியிருப்பார். இப்படி பல விதமான பேர் இருக்கிறார்கள். (பேரரசு பற்றி சொல்ல மாட்டிங்களான்னு கேட்காதிங்க அவரு ஒரே கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்துறவரு).
கௌதமின் திரைப்படங்கள் யதார்த்தமானவை. நான் என்னை மறந்து ரசித்திருக்கிறேன். அதில் ஹரிஸ் இற்கும் பங்குண்டு. வாரணம் ஆயிரம் என்ற அற்புதமான படைப்பை பார்த்த பிறகு அவருடைய கடந்த கால திரைப்படங்களை நினைவு கூர்ந்தேன். மின்னலே படத்தை தவிர ஏனைய நான்கு படங்களிலும் ஒரு ஒற்றுமை முக்கியமான பாத்திரத்தை கொலை செய்து விடுவார். அதுவும் குறிப்பாக பெண் பாத்திரம்.
காக்க காக்க படத்தில் மாயா(ஜோதிகா) எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறாள். வேட்டையாடு விளையாடு படத்தில் ஆராதனா(ஜோதிகா) மரணத்தின் விளிம்பில் காப்பற்றப்பட்டாலும் கயல்விழி(கமலினி முகர்ஜி) முதல் பாதியில் கொலைசெய்யப்படுகிறாள். பச்சைக்கிளி முத்துச்சரம் மீண்டும் ஜோதிகா ஆனால் இப்பொழுது மாறுபட்ட பாத்திரம் சரத்குமார் சுட்டு வீழ்த்துகிறார். இறுதியாக வாரணம் ஆயிரம் (மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்த படத்தை பார்க்காதவர்கள் திட்டுவாங்க என்ற காரணத்தால சொல்ல மாட்டேன் பாத்து தெரிஞ்சுகிங்க.)
இவருடைய திரைக்கதையில் முன்னணி பெண் கதாப்பாத்திரத்திற்கு பாதுகாப்பில்லை(அதுக்காக மு--- பொலீசை கூப்பிடவா முடியும்). ஆனால் திரைக்கதை நல்ல ஒரு கருவை கொண்டிருக்கும் . இன்னுமொரு ஒற்றுமை KK, VV, PM, VA இந்த படங்களில் பாதுகாப்பு துறையை சம்பந்தப்படுத்தியிருப்பார். துப்பாக்கி ரவைகள் பல உயிர்களை பதம் பார்த்திருக்கும்.
(அடுத்து பலியாகப் போறது யாருன்னு தெரியலயே......) Share
16 COMMENTS:
ஹி ஹி ஹி..என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடிவந்தேன்..
கொன்னுட்டீங்க போங்க.. :)
எதோ சூடான கிசுகிசு போலிருக்குன்னு விட்டதை விட்டபடி தொட்டதை தொட்ட படி விடுட்டுப் போட்டு வேகமா வோடியாந்தா!.இந்த பயபுள்ளைக்கு ரவுசப் பாருங்கடி!
சே ஏதாவது குல்மால் மேட்டர்னு வந்தா
போயாங்க
&@%#@$&*$*@@$*$&*%@$ ( பெரிய கெட்ட வார்த்தை MODIFIED BY AUTHOR )
ஓகே வந்தது வந்துட்டேன் இந்தாங்க என் கருத்து
சாகடிச்சாதான இன்னொரு ஹீரோயின படத்தில சேர்த்துக்க முடியும்..
கொன்னுட்டீங்க போங்க. நல்லா கவனிச்சிருக்கீங்க.
ஒரே நிகழ்வு இரண்டு முறை ஏற்பட்டால் அது எதிர்பாராத நிகழ்வு. ஆனால் திரும்பத்திரும்ப நான்கு முறை அதே நிகழ்ந்தால் அது எப்படி எதிர்பாரா நிகழ்வாகும்?/////////////////////////
ண்ணாஆஆஆஆ
Observation Good & Article Good!
கவுதமின் அடுத்த குறி - திரிஷா ( சென்னையில் ஒரு மழைக்காலம் )? :-)
:) மற்ற படத்தில் மாயா என்று நாயகிக்கு பெயர் வைப்பார். அதற்குக் காரணம் அவர்கள் மறைந்துவிடுவதால் தானா ?
வா.ஆ த்தில் 'மாயா' இல்லை, இருந்தும் ஒருவர் காலி.
சே சப்பென்டு போய்விட்டது
எல்லாம் சரி உங்க விமல் வாரணம் ஆயிரம் பார்த்துவிட்டு புலம்பிக்கொண்டு திரியிரார்ரமே லோஷன் அண்ணாவும் தனது நிகழ்ச்சியில போட்டூ குதறிவிட்டார் இப்ப ஆள் எப்படி??
தலைப்புக்கும் விளக்கத்துக்கும் தொடர்பை காணவில்லை.. ரொம்ப குழப்பி விட்டீர்கள்....
போன வாரம் விஜய் டிவி பார்த்திங்களா.... அதுல இருந்து சுட்டு கொஞ்சம் உங்க சிந்தனை மசலவ சேர்த்து சொல்லி இருக்குறிங்க........
Anna this s toooooooo much I can't watch "வாரணம் ஆயிரம்' here
because I'm in Bangladesh. We can't download also.....
So you must tell.
Can you?
sinthu
bangladesh
அண்ணா நீங்க ரொம்ப நல்லவருங்கோ வல்லவருங்கோ... :)
நல்லாருக்கு! இது கௌதம் மேனனே நோட் செய்திருக்க மாட்டாரு..:-)
பேரரசு பற்றி சொல்ல மாட்டிங்களான்னு கேட்காதிங்க அவரு ஒரே கதைய வச்சு வித்தியாசமான நடிகர்களை பயன்படுத்தி ரசிகர்களை ஏமாத்துறவரு
நச் என்று இருந்தது
இர்ஷாத்
Oh Hisham, I thought something else from attractive TITLE, but :D.
That is cool :)
Post a Comment