எதிரிகளை ஜெயிக்க என்ன வழி?

முற்பகல் 9:57 Hisham Mohamed - هشام 0 Comments

உலகமே எனக்கு எதிரி என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு ஆனால் உண்மையில் அவர்கள் எதிர்கட்சியினர் இல்லை பொதுக்குழுவில் இருக்கிற எதிர்மறையான கருத்துக்களை உடையவர்கள் அவ்வளவுதான். (எங்கேயோ படிச்ச ஞாபகம்)

இந்த வாழைப்பழம் மாதிரி தோளை உறிச்சா சில விடயங்கள் யதார்த்தத்திற்கு மாறாக இருக்கலாம். ஆனால் அதை சந்திக்கக்கூடிய தில் இருக்கனும் அதுதான் முக்கியம். எவனோ ஒருவன் எங்களுடைய மனதை புண்படுத்திவிட்டான் என்று சொல்கிறோம். அதற்கு யார் காரணம்? நாங்கள்தான். அந்த மாதிரி மங்கா பசங்களுக்கு எங்கள் மனதில் இடம் கொடுத்தது நாங்கள் செய்த முதல் பிழை. அவர்கள் வேண்டுமானால் எங்கள் உடலில் காயங்களை ஏற்படுத்தலாம் ஆனால் மனதை காயப்படுத்த முடியாது. அப்படி மனசு காயப்பட்டால் நீங்கதான் மாங்கா.

ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது ஒரு பெரியவர் நாயை கூட்டிக்கொண்டு ஒரு மாலைப்பொழுதில் நடந்து போகிறார். இவரை கேலி செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு ஒரு மாங்கா 'நாயை கூட்டிக்கொண்டு காலையிலே எங்க கிளம்பிட்டிங்க" அப்படின்னு கேட்க. பெரியவர் ரொம்ப அமைதியாக அவனை பார்க்க அதற்கு அந்த மாங்கா உங்களை சொல்லவில்லை நாயைத்தான் சொன்னேன் என்றான். அதற்கு அந்த பெரியவர் விவேகமாக பதில் சொன்னார். இனம் இனத்தோட தானே பேசும். என்றார்.
சமூகத்தை திருத்தனும்னு நிறையபேர் கிளம்பிட்டாங்க இவங்களால ஒரு நாளும் சமூகத்தை திருத்த முடியாது. அவர்களால் திருத்தக்கூடியது அவரை மாத்திரம்தான்.
இன்னு நிறைய விடயங்கள் சொல்லனும்போல இருக்கு இருந்தாலும் கடைமை அழைப்தால் என் எழுத்துக்கள் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும்.
வாழைப்பழம் சாப்பிடாம இருந்துடாதிங்கப்பா.....