மது அருந்திய குதிரை கட்டுப்பாட்டை இழந்ததில் முதியவர் பலி.

17:33 Hisham Mohamed - هشام 0 Comments


ரோமேனியாவில் குறித்த பிரதேசம் ஒன்றில் குதிரை சந்தை ஒன்று நடைபெற்றது. அந்த சந்தையில் சிங்கம் போல வலிமையுடன் காணப்பட்ட ஒரு குதிரையை வண்டியுடன் வாங்கினார் 56 வயதான Ion Dragan.
இவர் குதிரை வண்டியில் சந்தேசமாக வீடு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை மீறிய குதிரை பாதையோரத்தில் பலகையொன்றில் அமர்ந்திருந்த 86 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரோமேனிய பொலிசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. யாரை கைது செய்வது? எந்த அடிப்படையில் வழக்குத்தொடர்வது?

இறுதியில் பொலிசார் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த குதிரை வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்திருக்க வாய்ப்பில்லை ஆகவே குதிரை மது அருந்தி இருக்க வேண்டும். வியந்து போனராம் குதிரையின் புதிய உரிமையாளர். பின்னர் நடத்தப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனையின் போது குதிரை மது அருந்தியது தெரியவந்துள்ளது.


குதிரைகளும் தண்ணியடிக்க ஆரம்பிச்சுடிச்சுகளா சும்மாவே நாலு கால் அப்ப இனி எட்டு கால் தான் அப்படின்னு மூக்குல கையை வைக்க முதல்ல இன்னுமொரு விடயம் குதிரைகள் பசுக்கள் போன்ற மிருகங்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற போது அவற்றுக்கு மது ஊட்டப்படுவதுண்டு காரணம் அப்போதுதான் அவை சோர்வில்லாமல் வலிமையோடு காணப்படுமாம்.

0 COMMENTS: