நான் இன்னும் ஏகன் பார்க்கல பார்த்தால் துரோகின்னு சொல்றாங்க..

13:08 Hisham Mohamed - هشام 22 Comments


இப்பெல்லாம் நானும் ஏதோ சொல்ல ஆரம்பிச்சிட்டேன் பாருங்கோ. குறத்தி கதை சொன்னதெல்லாம் அப்போ இப்ப நான் பதியுறது புதுசு கண்ணா.

ஏகன் படம் பார்கலாம்னு ஒரு நண்பரை அழைத்தேன் படம் பார்த்தால் பட்டம் தாராங்கப்பா நான் வரல்லன்னு சொன்னாரு அப்பறம் நானும் யோசித்தேன் இருக்கிற பட்டத்தை பறக்க விட்றதுக்கே நேரமில்ல இது எதுக்கு. அஆஆ கடைசியா நண்பர் ஒன்னு சொன்னாரு 'அது" இதுல எக்கோ வேற

அஜித் அர்ஜீன் மற்றும் திரையுலகின் பிரபல புள்ளிகளுக்கு,பதில் சொல்ல மாட்டிங்கன்னு தெரியும் இருந்தாலும் உங்க படத்த காசு கொடுத்து பார்த்ததால கேள்வி கேட்கிற உரிமை எனக்கு இருக்கு.இவ்வளவு நாளும் நீங்க புதுசா வாங்குற பெனியன்ல இருந்து உங்க பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிற மிட்டாசு வரை இலங்கையில் மர நிழலில் பரிதவிக்கும் அப்பாவி தமிழ் மக்களின் பங்களிப்பும் இருக்குங்கிறத மறந்துட்டீங்க பாருங்க. ' டேய் திரையுலக மாங்கா இந்த நாள் உன்னுடைய டயரியில் குறிச்சு வச்சுக்கோ" அப்பிடின்னு டயலோக் பேச மட்டும்தான் முடியும் உங்கள பாத்து.
ஏன்னா நீங்கெல்லாம் பெரிய நடிகர் திலகமாச்சே.

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா அவ்வப்போது குரல் கொடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் திரைக்குப்பின்னால் பல விடயங்கள் மேடையேற்றப்பட்டது நான் சொல்லிதான் நீங்க தெரிஞ்சிக்கனுமா?

இதுவரை குரல் கொடுக்காத கருணாநிதி 10 லட்சம் ரூபா தாருகிறாராம் எதுக்கு யார் கேட்டது?சூப்பர் ஸ்டார் 26 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் சிவாஜி படத்திற்கு இதுல பெருமையா பேட்டி வேற பிபிசியில். கோடி கோடியா சம்பளம் வாங்குற இவர்கள் இதுவரையில் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன?இவர்களுக்கு சம்பளம் கொடுத்ததே இலங்கை தமிழர்கள் பாருங்கோ.
ஒன்னு பன்னுங்க நீங்க தார 10லட்சத்தோட இலங்கை தமிழர்களும் கொஞ்சம் பணம் சேர்த்து தருகிறோம் பீகார்ல துயரத்துல வாடுகிறவர்களுக்கு கொடுக்றீங்களா?

என்னதான் இருந்தாலும் இலங்கையில இருக்கிற மாங்கா பசங்களுக்கு தலயும் சூப்பர் ஸ்டாரும் தான் தெய்வம். அடிச்சி புடிச்சி முதல் காட்சியை பார்க்காவிட்டால் ஏன் உங்க வீட்ல அடுப்பெரியாதா?

22 COMMENTS:

IRSHATH said...

finding difficult to read the tamil font you use. Loshan's Blog i could read. Why not yours? இர்ஷாத்

//கோடி கோடியா சம்பளம் வாங்குற இவர்கள் இதுவரையில் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன?இவர்களுக்கு சம்பளம் கொடுத்ததே இலங்கை தமிழர்கள் பாருங்கோ//

அவன் சம்பாதிக்கிறான் செலவு பண்ணறான். இலங்கை தமிழனுக்கும் கொடுக்கிறது கொடுக்காம இருக்கிறது எல்லாம் அவன் இஷ்டம். இலங்கை தமிழர்கள் அஜித்,அர்ஜூன் படங்களை பார்க்கால் தவிர்த்தால் லாபத்தில் சில கோடிகளை இழக்க நேரிடும் அவ்வளவ் தான்.

இலங்களை தமிழர்களுக்கு ஆதரவு கேட்க மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதில் யாரும் தலையிட முடியாது.

ஆதரவு தரதவர்களை துரோகி என கூறுவது பைத்தியகாரதனமாக இருக்கிறது.

தமிழ் திரைபடங்களை திருட்டுதனமாக இனையத்தில் பரப்புவதில் முதலிடம் வகிப்பதும் இலங்கை தமிழர்கள் தான் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

HISHAM said...

நீங்க என்ன அஜித்குமாரா?

harijana said...

Iyya Hisham,

Konjam varthiya alanthu pesunga.

Ithu onnum Eazham illai. Ithu India, Tamil nadu.

Enna eazhathil Tamil padangal release anal than ennavo thamil nattil tamil nadiharhalin veetil aduppu eriyum endru ninaikkireerhala? enna romba overa irukku ungal pathivu.

Ajith mattum alla yarairunthalum Neengal ketpathu Atharavu pichai.

Amam Tamilan mattum Ilangail, Karnatakavil, Kanadavil, Bombayil Malaysiavil, Ean engae sendralum adi padukiran.

Nam nattil ulla matra mozhi pesukiraverkal yarum other stateil velai parkkavillaya? pizhaikkavillaya? Tamilan engu sendralum Thannai Thalaivanaha aha muyarchikkiran.

Eazhathirkku Tamilarhal sendrathu vayittru pizhaippukkaha anal angu thani nadu Ketkirarhal endral Ennavendru solla.

Ulaham muzhuvathu ulla muslim engellam irukkirarhalo angellam than pirivinaivatham thalai thookkuhirathu endra ava peyarudan ippozhuthu nam inathavaraiyum serkka pokirarhal.

Viduthalai puli thalaivarin Suya nalathirkaha Tamil eazha thil ulla anaithu appavi thamilarhalum balikada ahirarhal.

Netru Dinamalaril Ilangaiyil irunthu vantha 5 peridam visarithathil Viduthalai pulihal kattaya paduthi thangal iyakkathil sera sonnapiraku angirunthu Thappi odi karai serntha appavi iazha thamilarkalai kelungal Prabhakaran eappadi pattavan endru.

Tamil eazham patri avar indru Kuthikkirare enandral ilangai ranuvam kuriyathu pol anaithu idangalaium izhanthu varukirarhal athanal Sandai vendam endrusoll mudiyamal. Engea muzhuvathumaha veezhnthuviduvomo endru bhayappada arampithu vittarhal.

Anonymous said...

என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .

காரணம்

1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.

2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .

3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.

அமீர் முஸ்லீம் பெயர் கொண்டிருந்தாலும் அவருக்கு காத்தான்குடி சம்பவம் பற்றியோ யாழ்ப்பாண துரத்தல் பற்றியோ அறிவு இருக்கிறதா? பெண்ணை பாதி ஆடையுடன் காட்டும் அவருக்கு முஸ்லீம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது.

இந்தியா முதலில் மதத்தால் தான் பிரிந்தது. அதேபோல் இங்கும் தமிழர்களுக்கும் கிரிஸ்தவர்கட்கும் பிரச்சினை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஏன் இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?

முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

இர்ஷாத்

Anonymous said...

மனிதன் மாறிவிட்டான்! மதத்தில் ஏறிவிட்டான்!
வானும் மண்ணும் கடலும் சோலையும்
எதுவும் மாறவில்லை! மனிதன் மாறிவட்டான்
---சோவண்ணா. ஸ்ரீ

Anonymous said...

//இவர்களுக்கு சம்பளம் கொடுத்ததே இலங்கை தமிழர்கள் பாருங்கோ.//

புலத்தில் வசிக்கும் சில லட்சம் ஈழ தமிழ் மக்கள் பல கோடி தமிழ்நாட்டு தமிழரை விட அதிகமாக பணம் கொடுக்கிறார்களா? முடியலை :)))

Eazhathirkku Tamilarhal sendrathu vayittru pizhaippukkaha --
தமிழ்நாட்டிலிருந்து பிழைக்கப் போனவன் தனிநாடு கேட்கிறதா புரிந்து வைத்திருக்கிற - கரிசனா... உங்கள் அறிவு புல்லரிக்கவைக்கிறது. எவன்சொன்னாலும் திருந்தமாட்டீக நீங்க..

முதல்ல தூக்கத்தில இருந்து எழுந்தா பல்விளக்கி உடல் கழுவி வாருங்கள்.. பெனாத்துறதை விட்டுட்டு..

கரிசனா போன்னறவர்களை ஒரு வார்த்தையில் விமர்சித்தால் அது இவ்வாறுதான் இருக்கும்

லூசுப்பயல்...


இர்சாத் - வேரோடு பிடுங்கியெறியப்பட்ட வலி எப்போதும் ஆறாது. புரிந்து கொள்கிறேன்.

தகவலுக்காகவே கேட்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பொதுமக்களை வெளியேறச் சொல்லி புலிகள் கேட்டார்கள். ஆனாலும் பிறகு யாழ்பாணம் இராணுவ வசம் வீழ்ந்ததும் பொதுமக்கள் சென்று விட்டார்கள். அதுபோல யாழ்பாணத்திற்கு முஸ்லீம் மக்கள் திரும்புவது சாத்தியமற்றதா?

பெண்ணை பாதி ஆடையுடன் காட்டும் அவருக்கு //

பகிடிக்கு: அமீர் இதுவரை அவ்வாறு காட்டியதில்லை :) :)

IRSHATH said...

யாழ்பாணம் சென்றால் எங்கு இருப்பது? வாழ்ந்த வீடுகளின் அத்திவாரம் வரை பெயர்த்து எடுத்து விட்டீர்களே! நிலங்களையும் அபகரித்து விட்டீர்களே? சாதாரண தமிழ் மக்கள் தானே அதை செய்திருக்கிறீர்கள்? அன்று அந்த நேரத்தில் புலிகளுக்கு நீங்கள் புத்திமதி சொல்லவில்லையே? சொன்னால் கேட்கமாட்டார்கள் என்று நீங்கள் வாதிடுவீர்கள்! அப்படியாயின் புலிகள் உங்களை பிரதிநிதி படுத்தவில்லையா? உங்கள் சகோதரம்கள் தானே புலியில் இருந்தது? அவற்றையெல்லாம் தந்தால் வருவதற்கு என்ன? வர நினைக்கவும் கூடாது என்று தானே சங்கிலியன் படை எல்லை படை என்று ஒளிந்திருந்து மிரட்டல் விடுக்கிறீர்கள்?

அமீர் பெண்ணை பாதி ஆடையுடன் காட்டுவது என்பது ஒரு முஸ்லிமின் பார்வையில் இருந்தாகும். அது தொடர்பான அளவுகோல் இஸ்லாம் சொல்லும் ஆடை களுக்கான விதியாகும். எனென்றால் இங்கு கேள்வி அவரது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி புரிதல்களும் ஒழுகுதல்களும் மட்டுமே! அது தொடர்பான முஸ்லீம் அற்றவர்களின் அளவுகோல்கள் அல்ல.

இர்ஷாத்

அமீர் பெண்ணை பாதி ஆடையுடன் காட்டுவது என்பது ஒரு முஸ்லிமின் பார்வையில் இருந்தாகும். அது தொடர்பான அளவுகோல் இஸ்லாம் சொல்லும் ஆடை களுக்கான விதியாகும். எனென்றால் இங்கு கேள்வி அவரது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி புரிதல்களும் ஒழுகுதல்களும் மட்டுமே! அது தொடர்பான முஸ்லீம் அற்றவர்களின் அளவுகோல்கள் அல்ல.
//

மன்னிக்க வேண்டும்.
அமீர் பர்தாவுடன் பெண்களை காட்டவேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது எனக்கு விளங்கவில்லை. தவறு எனதுதான். பெண்கள் தங்கள் ஆடையை தாங்களே தீர்மானிக்கலாம் என்ற எண்ணம் என்னவோ சிறுவயதிலேயே ஏற்பட்டு விட்டதால் - மற்றவர்களும் அதை தீர்மானிக்க முடியும் எனத் தோன்றாமல் போய் விட்டது.

95 வரை யாழ்பாணத்தில் இருந்தவன். உறுதியாகச் சொல்ல முடியும்! யாழ்ப்பாணத்தின் முஸ்லீம் பகுதிகளில் உள்ள வீடுகள் பள்ளிவாசல்கள் இருந்தன. இடம்பெயர்ந்த சில மாவீரர் குடும்பங்கள் அதில் இருந்தன.

ஆனால் தற்போது வீடுகள் அபகரிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிடுகீர்கள். அவ்வாறு அதனைச் செய்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தமிழ்மக்கள்தான் அதனை செய்திருப்பார்கள். ஆனால் சிங்கள அரசுடன் நல்லுறவைப் பேணும் முஸ்லீம் அரசியல் வாதிகள் யாராவது அரச அல்லது சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே..

2002இல் புலிகள் மீளத்திரும்பலாம் என அறிவித்த பிறகு - எல்லாளன் சங்கிலியன் படைகள் திரும்ப வேண்டாம் என அறிவித்திருக்கின்றன என்பது எப்போ ? ஆதாரம் தந்தால் புலிகள் குறித்து புரிந்து கொள்ள உதவியாயிருக்கும்.

இறுதியாக மன்னிப்புக் கேட்க கூட அருகதையற்ற செயலை புலிகள் புரிந்தார்கள் என்பதை ஏற்கிறேன். அதை விடுத்து ஜிகாத் பெயரில் அவர்களும்தான் கொன்றார்கள் என்ற சமாளிப்புக்கள் எந்த விதத்திலும் இதற்கு சமாதானமாகாது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன்.

Anonymous said...

முஸ்லிம் - தமிழ் உறவு திட்டமிட்டு சிதைக்கப்பட்ட ஒன்று. முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்துக்கு முன்பு எத்தனையோ தடவை சச்சரவுகள் ஏற்பட்டு இருபக்கத்து தலைவர்களாலும் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டதை நான் அறிவேன். குறிப்பாக திலீபன் யாழ்மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கவிருந்த சச்சரவை தனி ஆளாக வீடு வீடாகச் சென்று மக்களுடன் கதைத்து மேலும் பிரச்சனைகள் வலுக்காமல் தீர்த்து வைத்ததும் நான் அறிந்தது. ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னணியில் இருக்கும் நோக்கக்களும் - அவர்களுக்குள் ஊடுருவியிருந்த ஒரு சில தீய சக்திகளை அகற்றுவதை விட்டு ஒட்டுமொத்த அப்பாவிகளையும் விரட்டியதை யாராலும் நியாயப்படுத்தவியலாது. கையில் சிறு பொதியேனும் எடுக்க அனுமதிக்கப்படாமல் அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது அதனை விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்...

-அநபாயன்.

Anonymous said...

//ஆதரவு தரதவர்களை துரோகி என கூறுவது பைத்தியகாரதனமாக இருக்கிறது.//
Bleachingpowder, புலிகளின் அகராதியில் தங்களுக்கு ஆதரவு தராதவர்கள் தமிழ் துரோகி, எட்டப்பன், ஒழிக்கப்படவேண்டியவன்.

Anonymous said...

Thank you for giving space for Bleachingpowder to hurdle anti-tamil venom.

ஏகன் பாக்கல்லன்னா விட்டுருங்க. பாக்குறதுன்னா பாருங்க. அதுக்கு ஏங்க பிளீச்சிங்பவுடரு போல ஆளுங்க அவுங்களோட இலங்கைதமிழர் மீதான வெருப்பை காட்ட ரோடு போட்டு குடுக்கரீங்க

முஸ்லீம்கள் வெளியேற்றம் தொடர்பாக
இர்ஷாத் நீங்கள் கடுமையான ஆவேசத்துடன் கருத்தாடுகிறீர்கள். வலிகள் வலிகள் என்று எத்தனை காலம் இப்படியே வாதிடப்போகிறீர்கள்?

- சாந்தி -

Anonymous said...

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்

தேவன். (கனடா)

இந்த உலகானது பல சுவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவையாவன மேற்காகவும், கிழக்காகவும், மொழிவாரியாகவும், வகுப்பு வாரியாகவும், அடிப்படையவாதங்களாகவும், நிற, இன, வாத வேறுபாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல வேறுபாடுகளை கொண்ட உலகமும், பலம் வாய்ந்த பெரும் தேசிய இனங்களும், அடிப்படைவாதங்கள் பேசும் குறுந்தேசிய, இனங்களும் ஒன்றை ஒன்று அடக்குவதாகவும் அல்லது விழுங்குவதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் நின்றுதான் எதிர்காலத்துக்கான அமைதி சுபீட்சம், மானிட இருப்பு என்பவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாடுகளையும் வரலாறுகளையும் ஆராயும் போது, 1977களின் பின்புதான் மிகவும் உச்சநிலையும் கொதிநிலையையும் அடைந்தது எனும் முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. 1977 தமிழருக்கு எதிரான இனக்கலவரம், வடக்கில் பாதுகாப்பு படைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக 1981ல் தமிழ் மக்களின் ஆன்மாவாக கருதப்பட்ட யாழ். நூலகம் எரிப்பைத் தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம். இதனைத் தொடர்ந்து தமிழ் தரப்பில் உருவாகிய எழுச்சிகள், பல்வேறு இயக்கங்கள் என இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலகட்டம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரிசனை அக்கறை இலங்கைத் தீவின் மீது என்றும் இல்லாதவாறு மிகவும் தீவிரம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர் அரசு மேற்கொண்ட திறந்த பொருளாதாரச் கொள்கையும் மேற்குலக சார்பான அரசியல் கொள்கை முன்னெடுப்புகளும் இந்தியாவுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவனவாகவும் உவர்ப்பாகவும் இருந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக அக்காலட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசு, தெற்காசிய பிராந்தியத்திய நாடான இலங்கையில் தனது ஆதிக்கத்தையும், ஆழுமையையும் ஸ்திரமாக பேணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டிறகு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய மத்திய நடுவன் அரசு பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் பலவித உதவிகளையும் வழங்குவதன் மூலம் ஜே.ஆர் அரசை ஆட்டங்காண வைத்து, இந்தியாவிடம் சரணாகதி அடைய வைப்பதற்காக இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டைக் கையாண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடானது தவிர்க்க முடியாததும்கூட. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கைத் தீவில் ஆட்சி செய்த பெரும்பான்மை அரசுகள் ஒர் உறுதிப்பாடற்ற அரசியல் தலைமைகளை கொண்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை சரிவர கையாளாதாலும், அனைத்து விடையங்களிலும் இந்தியாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் ப+கோள அரசியல் நலன்களை கொண்ட அரசியல் யதார்த்தமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் தமிழர் பிரச்சினையும் பார்க்கப்படல் வேண்டும்.

இவற்றினுள் ஒன்றை ஒன்று பிரித்து பார்க்க முடியாது. அதாவது பாலும் நீரும் போல இந்தத் தளத்தில் நின்றுதான் இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும். 1984 ஆண்டில் எதிர்பாராத இந்திராகாந்தியின் படுகொலை என்னும் கொடிய விபத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரப்படுகின்றார் ராஜீவ் காந்தி. ஏனெனில் அரசியல் என்பது அவரது விருப்பமான தேர்வாக இருக்கவில்லை. அதனால் அவரது வாழ்வின் முடிவும் கொடிய விபத்தாகவே அமைந்துவிடுகின்றது. இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. புலிப் பாசிச கும்பலின் ஊடகங்கள் இன்றுவரை இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிடாத நிலமையில், புலிகளின் பேச்சாளரான ப. நடேசனின் கோரிக்கைகளான கடந்த காலத்தை மறக்கும் படியும், தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கும்படியும் கூறி இருக்கிறார். புலிகளின் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை மறப்பதற்க்கு இது என்ன மாமியார் மருமகள் சண்டையா? இந்த விடையத்தை சர்வதேச இன்டர்போலும், இந்திய உயர் நீதிமன்றமும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்மானித்துவிட்டன. இந்த நிலையில் பிரபாகரன் சார்பாக ப. நடேசன் சோனியாகாந்தியிடம் கோரிக்கைவிடுவது மிகவும் அபத்தமானது.

எது எப்படி இருப்பினும் ராஜீவ் காந்தியின் விருப்பமற்ற அரசியல் பிரவேசம் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் களங்கமற்ற முகங்கொண்ட ராஜீவ் காந்தியின் கொலையென்பது மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ முடியாத குற்றமாகவும், அவரைக் கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்னும் குரல்கள் பலமாக எப்போதும் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். புலிகளின் கடந்த கால நூற்றாண்டிற்கும் மேலான பாசிச பொறிமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அது என்னவெனில், புலிகளது பாசிச கட்டுமானங்களையும, செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நேர்மையான, பலவீனங்களற்ற திறன் உள்ளவர்களை, புலிகள் ஒருபோதும் அணுகுவதில்லை. மாறாக, தங்களை கேள்வி கேட்பவர்களையும் தமக்கு அரசியல் சவாலாக இருக்ககூடியவர்களையும், திறமையானவர்களையும் துரோகம் பட்டம் சூட்டி, சுட்டு அழித்தே வந்துள்ளர்கள்.

ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அவர்களின் வாழ்விற்கு செழிப்பூட்டிவருகிறார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது, தமிழ் நாட்டு சினிமாக் காரர்கள் மட்டும் தங்கள் நன்றிக் கடனை வெளிப்படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டு சினிமாக் காரர்களிடமும் திராவிட கட்சிகளிடமும் இலங்கைத் தமிழனான நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுவது போல நினைத்து, இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள். இந்து, தினமலர், துக்ளக், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகள் புலிகளை எதிர்த்து எழுதி வருவதால், அவைகளை பிராமணியப் பத்திரிகைகள் என வர்ணித்து, அதனால்தான் இலங்கைத்தமிழர்களை எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். தயவுசெய்து உங்குள்ள பிராமணிய ஆதிக்கத்தையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தொடர்புபடுத்தாதீர்கள். (மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.
http://www.thenee.com/

Anonymous said...

தேனி ஜெமினியும் அவர் மனைவியும் பசில் ராஜபக்சவை சந்தித்தையும் தேனி வெளியிடுமா?

இர்ஷாத்,

முஸ்லிம் வெளியேற்றம் தொடர்பான தங்கள் உணர்வு வெளிப்படும்போது, நாம் தமிழர்களாக கூனிக்குறுகிப் போகின்றோம்.

விடுதலைப்போராட்ட வரலாற்றில், விடுதலைக்கு எதிராக, விடுதலையின் முகத்தில் கரிபூசச்செய்யப்பட்ட வலிமிகுந்த துரோகங்களில் அதுவும் ஒன்று.

அந்த வெளியேற்றம் மனிதர்களுக்கெதிரானது. அது மனிதர்களுக்கு, விடுதலைக்குபோராடுவதாகச்சொல்லிக்கொண்ட ஓர் இயக்கம் செய்த துரோகம்.

அது என்றென்றைக்கும் முஸ்லிம்களால் மன்னிக்கப்பட முடியாதது என்பதை மிகுந்த வலியோடு ஏற்றுக்கொள்கிறோம்.

இச்சம்பவம் காரணமாக முஸ்லிம்களுள் ஏற்பட்ட வெறுப்புணர்வை எதிர்ப்புணர்வை புலிகளே பொறுப்பேற்கவேண்டும்.

ஆனால் தமிழர்களாக நாம் எமது விடுதலையை வென்றெடுப்பதற்கான முழு ஆதரவையும் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கூட வாழும் இனம் என்ற அடிப்படையில், ஒரே பேரினவாதத்தாஅல் ஒடுக்கப்படும் இன்னொரு இனம் என்ற அடிப்படையில் எமது போராட்டத்தினை புரிந்துகொள்ள வேண்டுவதைத்தவிர வேறென்ன எம்மால் கோர முடியும்?

ஒவ்வொரு மனிதரும் சுய மரியாதையுடனும், சம உரிமைகளுடனும் வாழ வேண்டுமென்பதே மனித விடுதலையின் அடிப்படை.

இந்த மனித விடுதலையின் ஒரு பகுதி முஸ்லிம்களின் உரிமை மீட்பென்றால், இன்னொருபகுதி தமிழர்களின் உரிமை மீட்பும்தான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்.

சிங்களப்பேரினவாதத்தால் லட்சக்கணக்கானவர்கள் மடிந்தபின்னும், சிங்கள மக்கள், ஒடுக்கப்பட்ட சிங்களச்சகோதரர்களின் விடுதலையையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதும் இதே அடிப்படையிலமைந்ததுதான்.

முஸ்லிம் தமிழ் உறவைக் குலைப்பது பேரினவாதத்துக்கு மிகவும் சாதகமானது. அதனாற் தான் மிகவும் நுணுக்கமாக அதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

தமிழரின் விடுதலைப்போராட்டம் இன அடிப்படையானதே தவிர மத அடிப்படையானதல்ல. உண்மையில் மதசார்பற்ற போராட்டமே இது. முஸ்லிம்களை தமிழர்கள் பிறிதொரு இனமாககருதியமையாலேயே வெறுப்புணர்வுடன் வெளியேற்ற ஆதரித்தனர்.

ஈழப்போராட்டத்தை கிறிஸ்தவ மயமாக்க முயற்சியாக திரிக்க சிங்களப்பேரினவாதம் முயசிப்பது தாங்கள் அறியாததல்ல.

அதேவேளை, கிழக்கிலங்கையில் காலத்துக்குக்காலம், முஸ்லிம் குழுக்களது தாக்குதல்களுக்கு உயிர்ப்பலியான தமிழர்களும் ஏராளம் உளர்.

இந்த இனவெறுப்புணர்வை, பிரதேச வெறுப்புணர்வை, இன மேலாதிக்கத்தை , ஆண் மேலாதிக்கத்தை, சாதியத்தை திணிப்பவர்கள், கைய்லெடுப்பவர்கள் அனைவரும் மக்கள் விரோதிகளே.

மக்கள் விரோதிகளை இனம்கண்டு களைவதன் மூலம், சரியான விடுதலைப்போரை நாம் ஆதரிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் இந்த அடிப்படையில் பாதிக்குப்பாதி மக்கள் விரோதிகளாகவே உள்ளனர் என்பதை ஏற்றுகொள்ள எனக்கு தயக்கமில்லை.

ஆனால் மீதிப்பாதி ஒரு கூட்டம் மக்களின் தவிர்க்கமுடியாத ஆயுதமாகவும் அவர்களே உள்ளனர் என்பது வரலாற்றின் கட்டாயம்.

Anonymous said...

ஐயா அறிவுக்கொழுந்து மயூரன் முஸ்லீம்களை ஏன் அங்கிருந்து அகற்றினார்கள் என்பதற்க்கு தங்களுக்கு காரணம் தெரியுமா? தமிழ்த் தலைவரைப் பற்றியோ ஒழுங்காகத் தெரியாத அரைக்கிறுக்கன் தானே நீங்கள். முஸ்லீம்கள் புலிகளை யாழ்ப்பாணத்தில் காட்டிகொடுத்தது உனக்குத் தெரியுமா? கிழக்கில் முஸ்லீகளும் அவர்களின் தலைமைகளும் தமிழர்களை கொன்றதும் தெரியாதா? கருணா அம்மா இல்லையென்றால் கிழக்கு முஸ்லீம்களின் எகாதிபத்தியமாக மாறியிருக்கும் இதுகூடவா உங்களுக்குத் தெரியாது.

இப்போ யாழ்ப்பாணத்தில் அரசின் ஆட்சி முஸ்லீம்கள் இலகுவாகச் சென்று குடியேறலாம் தானே ஏன் செய்யவில்லை? இதெல்லாம் முஸ்லீம் கட்சிமாறி அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை என்பதை எப்போ புரிந்துகொள்ளப்போகின்றீர்கள்.

இந்த பிளீச்சீங் பவுடர் ஒரு பார்ப்பன நாய் அவனுக்கு எல்லாம் இடம் கொடுக்கவேண்டாம் ஹிஷாம்

//முஸ்லீம்கள் புலிகளை யாழ்ப்பாணத்தில் காட்டிகொடுத்தது உனக்குத் தெரியுமா?//

கிறிஸ்தவர்கள் காட்டிக்கொடுக்கவில்லையா?

தமிழர்களே காட்டிக்கொடுக்கவில்லையா?

வெள்ளாளர்கள் காட்டிக்கொடுக்கவில்லையா?

கிறிஸ்தவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றினீர்களா? தமிழர்கள் தான் முஸ்லிம்களையும் விட அதிகமாக காட்டிக்கொடுத்தார்கள். இப்பொழுதும் மிக நீண்ட பட்டியலாக காட்டிக்கொடுத்தவண்ணமிருக்கிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி இருக்கலாமே? அல்லது வெள்ளாளன் காட்டிக்கொடுத்தான் என்று வெள்ளாளர்களையே வெளியேற்றி இருக்கலாமே?

ஏன் முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும்?

//கிழக்கில் முஸ்லீகளும் அவர்களின் தலைமைகளும் தமிழர்களை கொன்றதும் தெரியாதா? //

இதைப்பற்றி எனது பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்.

//இப்போ யாழ்ப்பாணத்தில் அரசின் ஆட்சி முஸ்லீம்கள் இலகுவாகச் சென்று குடியேறலாம் தானே ஏன் செய்யவில்லை? இதெல்லாம் முஸ்லீம் கட்சிமாறி அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை என்பதை எப்போ புரிந்துகொள்ளப்போகின்றீர்கள்.//

அது உண்மையே.

//தமிழ்த் தலைவரைப் பற்றியோ ஒழுங்காகத் தெரியாத அரைக்கிறுக்கன் தானே நீங்கள்//

அவரைப்பற்றி "முழுசாக" தெரிந்து வைத்திருக்கும் அறிவுக்காக உங்களை பாராட்டுகிறேன்.

//கருணா அம்மா இல்லையென்றால் கிழக்கு //

:) காட்டிக்கொடுப்பது பற்றி ஏதோ நீங்கள் சொன்னதாய் நினைவு..

IRSHATH said...

நண்பர்களின் கருத்துகட்கு நன்றி!

"சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே.."
ஏன் அதை முஸ்லீம் இனவாதம் என்று பத்திரிகைகளில் தலைப்பிட்டு முஸ்லீம் விரோதத்தை இன்னும் கூர்மை படுத்தவா? மீண்டும் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொள்ள பிச்சைக்காரர்களாகவேனும் நிம்மதியாக வாழும் அப்பாவிகளை பகடை காய்களாக்கவா? யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதற்கு வெள்ளவத்தையில் நிரம்பி வழியும் தமிழர்களே சமகால சான்று.

அத்துடன் மிக அண்மைய முதூர் வெளியேற்றமும், வெளியேற்றத்தை மறைமுகமாக நிர்பந்திதமையும் (குரங்கு பாஞ்சான் உட்பட) யாழ் மீள்குடியேற்றம் இப்போது சாத்தியமானதல்ல என்று கோடிட்டு காட்டுகின்றது.

மற்றும் அது தொடர்பான கருத்தாடல்கள் இரு சமூக பிரபலங்களுடன் ஏராளமாய் "எரிமலை"யில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேறல் தங்களுக்கு உவப்புக்குரியதில்லை என்று பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். (அவை தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போதும் என் கணனியில் பாதி இடத்தை பிடித்திருக்கின்றன)

எல்லாளன் சங்கிலியன் படைகளின் மிரட்டல்களை அறிந்துகொள்ள அக்கால முஸ்லீம் பத்திரிகைகளை பாருங்கள். எனென்றால் தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை என்பது நீங்கள் அறியாததொன்றல்ல. (ஏன் சிங்கள இனவாதம் முஸ்லிம்களை தாக்கும் போது கூட இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்றே செய்தி வெளியிடுகின்றன!)

(முஸ்லீம் சிங்கள பிரச்சினைகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட போதெல்லாம் சிங்கள இனவாதிகளை காத்துதவி புரிந்ததெல்லாம் அக்கால தமிழ் தலைமைகள் என்பதும் இன்னும் மறக்கமுடியாத வரலாற்று பாடம். )

"விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்..."

யாழ்ப்பாண மக்கள் அறிவு கொழுந்துகள் என்ற நம்பிக்கையில் மரண அடி கொடுத்த வாக்கு மூலம் இது.

சாந்தி ஆசைக்காக நான் இங்கு கருத்தாடவில்லை. இரு தசாப்தத்தை நெருங்கிவிட்ட யாழ் முஸ்லிகளின் பிரச்சினையில் இன்னும் தமிழ் மக்களின் பார்வை அன்றிருந்ததை விட பெரிதாக மாறவில்லை என்ற உண்மையின் வலிக்கிறது . அவ்வளவே. இக்கால பகுதியில் எல்லா வெகுஜன ஊடகங்களிலும் சொல்லப்பட்ட முஸ்லிம்களின் நியாயம் தமிழ் மக்கள் காதுகளில் கூட போட்டுக்கொள்ளவில்லை என்று புரிகிறது அல்லவா? விடிய விடிய ராமாயணம்...

அத்துடன் அதைவிட பழைய ஜூலை இன்றும் பேசப்படும்போது அக்டோபர் மறக்கப்படும் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம் இயலும்?

விடுதலை இயக்கங்களில் முக்கிய புள்ளிகளாக இருந்த முஸ்லீம் கள் பிற இயக்கத்தவர்களால் மட்டுமல்ல அதே இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட உண்மை மறக்கடிக்க பட்டுவிட்டதா?

இதேவேளை முஸ்லிம்களின் வலியை புரிந்த எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.

முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது "தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்!" நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

இர்ஷாத்