அன்புள்ள ஆட்காட்டிக்கு

12:51 Hisham Mohamed - هشام 1 Comments

// உங்களுக்கு எந்த நாடு? என்ன இனம்? ஒரு கேள்வி நான் பௌத்த மதத்தை தழுவினால் சிங்களவனாக மாற முடியுமா? கிறிஸ்தவனாக மாறி ஆங்கிலேயனாக மாறலாமா?பிறகு எப்படி இஸ்லாம் மதம் மாறினால் முஸ்லீம் ஆக மாறலாம்? //

என் தாய்மொழி தமிழ்தான் அதில் சந்தேகம் வேண்டாம். தமிழ்தான் எனக்கு சோறு போடுகிறது.....

இந்தியர்களிடம் இருக்கிற ஒரு நல்ல பண்பு இலங்கையர்களிடம் இல்லை அவர்கள் நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். ஆனால் இலங்கையில் யாரும் எனக்கு தெரிந்த அளவில் நான் இலங்கையன் என்று சொல்வதில்லை. (அதற்கும் அதுதான் காரணம்)

நான் எழுதிய 'கறுப்பு ஒக்டோபர்'; பதிவை கந்தசாமியோ, ஜெக்சனோ எழுதியிருந்தால் உங்கள் பார்வையும் பின்னூட்டமும் வித்தியாசமாக இருந்திருக்கும். என்னுடைய எந்தவொரு பதிவும் மதச்சார்ந்ததல்ல குறிப்பாக என்னுடைய 'எதயும் யாரும் வளர்க்க தேவையில்லை' பதிவுக்கு வந்த பின்னூட்டம் தான் கறுப்பு ஒக்டோபர் தலைப்புக்கு உதவியது.

// Anonymous said... dai sony p----- mahanai vaaya muududaaOctober 24, 2008 5:17 PM //ஒற்றுமையை வலியுறுத்தியதற்கு கிடைத்த பரிசு.

என்னுடைய பார்வையில் கறுப்பு ஜுலைக்கு கொடுக்கிற அதே இடம்தான் கறுப்பு ஒக்டோபருக்கும். தவறை கந்தசாமி, முஹம்மட், ஜெக்சன் யார் செய்தாலும் அது தவறுதான். இலங்கையில் நடக்கிற நடந்த அவலத்தை ஒரு ஊடகவியலாளனாக இருந்தும் எழுத வில்லை என்றால் நானெல்லாம் எதுக்கு பதிவெழுதனும்.

அன்புள்ள ஆட்காட்டிக்கு
//அல்லாவின் பேரால கிழக்கில நீங்கள் செய்த அட்டூழியங்கள் தெரியுமா? அதை எல்லாம் பட்டியல் போட முடியுமா? இலங்கையில் வழுவீர்கள். சாதரண கிரிக்கெட்டுக்கே பாகிஷ்தானுக்கு ஆதரவு செய்வீர்கள். ஏன்? நீங்கள் யார்? //
அல்லாஹ்வின் பெயரால் அட்டூழியங்கள் செய்யச் சொல்லி இஸ்லாம் கூறவில்லை யாரோ ஒரு தீவிரவாதி இஸ்லாமிய பெயருடன் செயற்பட்டதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?கிழக்கில் யார் புரிந்தது அட்டூழியம்?காத்தான்குடி பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்தது யார்?
அரந்தலாவ விகாரையில் அட்டூழியம் புரிந்தது யார்?
90களில் கிழக்கில் பெண்களை கற்பழித்தது யார்?
செய்றத செஞ்சிட்டு மதங்களை எதற்கு வம்புக்கு இழுக்கணும்.

உன் மதம் உனக்கு என்மதம் எனக்கு நபிகள் நாயகம்.

ஆட்காட்டி உங்களிடம் ஒரு கேள்வி //மானங்கெட்ட தமிழர்களே......... நானும் நெடு நாளாய் பதிவு மற்றும் பல பக்கங்களை படித்து வருகிறேன். ரொம்ப நாட்களாகவே ஒரு வருடல். குசேலன் பற்றி பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள். குருவி பற்றி விமர்சனங்கள் பறக்கின்றன. கமலுக்கு காவடி பிடிக்கிறார்கள்.ஆனால் //மற்றவர்களை கேள்வி கேட்கிற நீங்க ஏன் இத பதியப்படாது...

இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்னுடைய கருத்து. புரிந்து கொள்ளுங்கோ...............

1 COMMENTS:

வணக்கம் ஹிஷாம் வடபகுதியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் தற்போதைய நிலைமை அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் போன்றவற்றை பற்றி நாளை ஒரு நிகழ்ச்சி Yatv ல் உள்ளது நாளை(வியாழன்) மாலை 7.25கு TNL அலைவரிசையை பார்க்கவும் பார்க்கவும்