தண்டவாளத்தில் துணி துவைப்பது போல ஓங்கி அடித்து குழந்தை கொடூர கொலை.

05:46 Hisham Mohamed - هشام 3 Comments


ஜூகுனு என்கிற மனித மிருகத்தை பொலிசார் தேடிவருகின்றனர்.


அம்பத்தூர் : பணம் கேட்டு மிரட்டி, உறவினரின் குழந்தையை கடத்தி ரயில் தண்டவாளத்தில் அடித்துக் கொடூரமாக, கொலை செய்தவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை பள்ளப்பதெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(31). இவர் கொருக்குபேட்டையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சைலஜா(24). இவர்களுக்கு மோனிக்(3) என்ற ஆண் குழந்தை இருந்தது. ஆனந்தின் அத்தை மகன் ஜூகுனு(35). இவர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி ஊதாரித்தனமாக பணத்தை செலவு செய்து சுற்றி வருபவர்.


ஜூகுனு, உறவினரான ஆனந்தின் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். ஆனந்த் வீட்டில் இல்லாத நேரங்களில் வந்து அவரது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு, சைலஜாவை மிரட்டி பணம் பறித்துச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அவரது முறைகேடான நடவடிக்கை ஆனந்திற்கு தெரியவந்து, அவர் ஜூகுனுவை கண்டித்திருக்கிறார். அவர் பணம் கேட்டு மிரட்டினால், தன்னிடம் தெரிவிக்குமாறும் மனைவிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஆனந்த் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றது ஜூகுனுவிற்கு தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் பிற்பகல் ஆனந்தின் வீட்டிற்கு சென்ற ஜூகுனு, வழக்கம் போல் குழந்தையை கொஞ்சியபடியே சைலஜாவிடம், 25 ஆயிரம் ரூபாய் வேண்டும்.

இல்லாவிட்டால் உன் குழந்தையை கடத்திச் சென்று விற்று விடுவேன் என்று மிரட்டினார்.
அதிர்ச்சி அடைந்த அவர் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. இனிமேல், இங்கு வந்து இது போல் தொந்தரவு செய்தால், மீண்டும் என் கணவரிடம் தெரிவித்து விடுவேன் என்று கடுமையாக எச்சரித்து குழந்தையை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டார். வழக்கம் போல் வீட்டு வேலைகளில் சைலஜா ஈடுபட்டார். மாலை 6.30 மணிக்கு அப்போது வீட்டு போன் ஒலித்தது. சைலஜா எடுத்து பேசினார்.


மறு முனையில் பேசிய ஜூகுனு உன் குழந்தையை கடத்தி விட்டேன். நீ எங்கு போனாலும் என்னையும், குழந்தையையும் கண்டுபிடிக்க முடியாது என்று மிரட்டி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சைலஜா, போன் மிரட்டல் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். சென்னை யானைகவுனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.


தனிப்படை போலீசார் குழந்தை மற்றும் ஜூகுனுவை தீவிரமாக தேடினர். நள்ளிரவு 1 மணிக்கு மேல் மீண்டும் ஜூகுனு, போன் மூலம் சைலஜாவை தொடர்பு கொண்டு, எனக்கு பணம் கொடுக்காமல் அலட்சியபடுத்தியதால், உன் குழந்தையை திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடித்துக் கொலை செய்து விட்டேன். இனி என்னை, நீங்கள் யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று கூறிவிட்டு, போனை துண்டித்து விட்டார்.
இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார், ஆவடி ரயில்வே போலீசார் மற்றும் திருமுல்லைவாயல் போலீசார் உதவியுடன், அம்பத்தூர் முதல் ஆவடி வரை ரயில்வே எல்லை பகுதிகளில் குழந்தையை தேடினர். நள்ளிரவு 2.30 மணி அளவில், திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில், எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்திற்கான தண்டவாளத்தில் குழந்தை மோனிக்கின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.


பணம் கிடைக்காத ஆத்திரத்தில், சைலஜா மற்றும் ஆனந்தை பழிவாங்கும் எண்ணத்தில் ஜூகுனு, குழந்தையின் காலை பிடித்து துணி துவைப்பது போல், தண்டவாளத்தில் ஓங்கி அடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் குழந்தையின் தலை உடைந்து மூளை சிதறியிருந்தது. நள்ளிரவில் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து, யானைகவுனி போலீசார் வழக்கு பதிவு,கொடூர கொலையாளி ஜூகுனுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்க

3 COMMENTS:

:(

மனிதநேயம் என்றால் என்ன்வென்று போதிக்க வேண்டிய காலகட்டத்திற்கு வந்துவிட்டோம்!

அரக்கர்கள் மீண்டும் அவதரிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு ஜுகுனு ஓர் உதாரணம்!

TAMIZHAN said...

THIS GUY SHOULD BE HANGED. HE WOULD NOT BE A PRODUCTIVE CITIZEV AND HE IS A WASTE OF LIFE.